மீண்டும் முடங்கிய ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்..என்னதான் பிரச்சினை.. கடும் அதிப்தியில் வாடிக்கையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் மீண்டும் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ 4ஜி நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகிறது. அன்லிமிடெட் கால் அளவில்லா இன்டர்நெட் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ அபார வளர்ச்சியை சந்தித்த நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களைநெருக்கடிக்கு உள்ளாக்கியது.

செல்போன் சேவைத் துறையில் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் விலகிய பிறகு இந்தியாவில் செல்போன் ஜாம்பவான் நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. இதையடுத்து மீண்டும் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்தியதையடுத்து வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லுக்கு தாவத் தொடங்கினர்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லுக்கு மாறிய நிலையில் தற்போது பல்வேறு பிரச்சினைகளை ஜியோ நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அடிக்கடி அந்த நிறுவனத்தின் நெட்வொர்க் முடங்குவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று மதியம் 12 மணி முதல் ஜியோ நெட்வொர்க் வழங்கியதாக புகார் கூறுகின்றனர் அந்நிறுவனத்தின் பயனர்கள். அடிக்கடி நெட்வொர்க்கை செயலிழக்கச் செய்து வாடிக்கையாளர்களை அவதி அடைய செய்வது ஜியோ நிறுவனத்தின் வழக்கம் போல் தெரிகிறது.

சேவை முடக்கம்

சேவை முடக்கம்

மற்ற நிறுவனங்களில் இதே குறைபாடு உள்ளது. ஆனால் சிறிது நேரம் முடக்கம் இருக்கும் என்ற நிலையில் ஜியோவில் அடிக்கடி பெரிய அளவில் நெட்வொர்க் பக்கம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2021 அக்டோபரில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல பயனர்கள் ஜியோவின் நெட்வொர்க் செயலிழந்து போவதாக புகார் கூறினர். இன்று அது மீண்டும் நடந்துள்ளது. ஆனால் இம்முறை மும்பை பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவது போல் தெரிகிறது.

வாடிக்கையாளர்கள் அவதி

வாடிக்கையாளர்கள் அவதி

நெட்வொர்க் செயலிழந்தது குறித்து ரிலையன்ஸ் ஜியோ இதுவரை பதிலளிக்கவில்லை என கூறப்படும் நிலையில், 2021 ஆம் ஆண்டிலும் அதன் நெட்வொர்க் வீழ்ச்சியடைவதற்கான காரணத்தை ஜியோ தெரிவிக்கவில்லை. இப்போது அதைக் தெரிவிக்க வாய்ப்பில்லாத நிலையில் மும்பை பகுதியில் ஜியோவின் நெட்வொர்க் செயலிழந்து வருவதாக ட்விட்டரில் பல பயனர்கள் புகார் கூறி வருகின்றனர். சில பயனர்கள் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு வருகின்றனர். கடந்த முறை, ஜியோவின் நெட்வொர்க் செயலிழந்தபோது, ​​பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு கூடுதல் நாட்கள் வேலிடிட்டியை வழங்கிய நிலையில், ஜியோ மீண்டும் 2 நாட்கள் இலவச சேவையை வழங்குமா என கேள்வி வருகின்றனர்

பயனர்கள் கோரிக்கை

பயனர்கள் கோரிக்கை

இருப்பினும், மும்பையில் உள்ள பயனர்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினையால், ஜியோ சேவைக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஒரு உயர்தர டெலிகாம் ஆபரேட்டரின் நெட்வொர்க் மீண்டும் மீண்டும் செயலிழந்து போவது சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல. பல வணிகங்கள் மற்றும் குடும்பங்கள் நாடு முழுவதும் உள்ள மற்றவர்களுடன் இணைவதற்கு ஜியோவின் மொபைல் நெட்வொர்க்குகளை சார்ந்துள்ளது. இது போன்ற நிலை தனிநபர்களுக்கு நிறைய இழப்பை ஏற்படுத்தும். ஜியோ நிறுவனம் நெட்வொர்க்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால தீர்வை ஏற்படுத்த வேண்டுமென பயனர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+