மிரட்டும் பைபர்ஜாய் புயல்..அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடையும்..இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பைபர்ஜாய் அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் நிலவிய நிலையில் தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் ஆரம்பிக்க தொடங்கியுள்ளன. அதற்கு ஏற்றபடி, அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு புயலாக மாறியது. இந்த புயலுக்கு பைபர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் பேராபத்து என்பதாகும். புயலானது நேற்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாக வலுவடைந்தது.
அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, கோவாவிற்கு மேற்கு மற்றும் தென்மேற்கே சுமார் 870 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கே 930 கி.மீட்டர் தொலைவிலுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் படிப்படியாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் அடுத்த தினங்களில் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications