புல் புல்.. பெயர் சூட்டியது பாக்.. பேருக்கேற்ப மென்மையாக இருக்குமா.. "தீவிர தாக்குதல்" நடத்துமா?
Recommended Video
டெல்லி: வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு புல் புல் என பெயர் சூட்டியது பாகிஸ்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவடைந்து தமிழகத்துக்கு மட்டுமே பலனை அளிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
இதையொட்டி அரபிக் கடலில் கியார் என்ற புயல் உருவானது. இது தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரத்துக்கு மழையை தந்தது. பின்னர் கன்னியாகுமரி கடல் பகுதியில் மஹா என்ற புயல் உருவாகியுள்ளது.

வலுப்பெறும்
இது குஜராத்தை நோக்கி செல்கிறது. இதனால் தமிழகத்தில் சில நாட்களாக பெரிய அளவுக்கு மழையில்லை. இதனிடையே அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டது.

ஒடிஸா கடலோரம்
இந்த நிலையில் வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகியுள்ளது. இது வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிஸா பகுதியை நோக்கி நகரும் என சொல்லப்பட்டது. ஆனால் ஒடிஸா கடற்கரையிலிருந்து புயல் விலகிச் செல்லும் என்கிறார்கள்.

காற்று திசை
மேலும் புல்புல் புயல் வங்கதேசத்தை நோக்கி செல்வதாகவும் இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் மிதமான மழையை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது. எனினும் காற்றின் திசையை பொருத்தே சரியாக கணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

மென்மையாக இருக்குமா புல்புல்
இந்த நிலையில் புல் புல் புயலுக்கு பாகிஸ்தான் நாடு பெயர் சூட்டியுள்ளது. புல்புல் என்றால் மென்மையான இனிமையான குரல் கொண்ட ஒரு வகை பறவையாகும். புயலுக்கு புல் புல் என பெயர் வைத்ததால் பெயருக்கேற்ப மென்மையாக இருக்குமா இல்லை தீவிர தாக்குதல் நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications