பெஞ்சல் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு- ராகுல், பிரியங்கா வேதனை-காங்கிரஸ் கட்சியினருக்கு வேண்டுகோள்!
டெல்லி: தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்பி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வங்க கடலில் மையம் கொண்ட பெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் வட பகுதிகளை கடுமையாக பாதித்துவிட்டது. பெஞ்சல் புயல் வங்க கடலிலேயே கடும் போக்கு காட்டியது. புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பின்னரும் வலுவிழக்காமல் நிலை கொண்டு வட தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டது பெஞ்சல் புயல். இதனால் வட தமிழகத்தின் மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டது. வட தமிழ்நாட்டில் கடந்த இரு நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவண்ணாமலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வட தமிழ்நாடு மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் புயல் மழையால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ2,000 வழங்கப்படும்; சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ10,000 நிவாரண உதவித் தொகை; விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ17,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல வயநாடு தொகுதி எம்பியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கவலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications