அடக்கடவுளே! மோச்சாவும் போச்சா! புயல் எங்கு எப்போது கரையை கடக்கிறது? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
டெல்லி: மோச்சா புயலானது வரும் மே 14 ஆம் தேதி கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே சுமார் 510 கி.மீ. காக்ஸ் பஜாரின் தென் மேற்கே 1,480 கி.மீ. மற்றும் சிட்வேக்கு (மியான்மர்) தென்- தென் மேற்கில் 1360 கி.மீ தொலைவில் உள்ளது.

இது மே 10 ஆம் தேதி இன்று மாலை அதே பகுதியில் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. அந்தப் புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. இதை ஏமன் நாடு பரிந்துரை செய்தது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அது படிப்படியாக மேலும் தீவிரமடைந்து மே 11ஆம் தேதி காலை அதிதீவிர புயலாகவும், அதே மாலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் மிகக் கடுமையான புயலாகவும் மாறும்.
அதன்பிறகு, அது படிப்படியாக மீண்டு வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) ஆகியவற்றுக்கு இடையே 14 முன்மதியம் கடக்க வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய போது தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும்.

அந்தமான் நிகோபர் தீவுகள்: 11 ஆம் தேதி வரை இந்த பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் சில இடங்களில் 12 ஆம் தேதி அன்று கனமழை பெய்யும்.
அது போல் திரிபுரா மற்றம் மிசோரம் மாநிலங்களில் 14 ஆம் தேதி சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
நாகாலாந்து, மணிப்பூர், தெற்கு அஸ்ஸாம்: 14 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு வங்கம் அல்லது ஒடிஸா பக்கம் இந்த புயல் போகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் கரையை கடக்கிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications