தூண்டிவிடும் திமுக? டேனிஷ் அலி விஷயத்தில் என்ன நடந்தது? பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரபர பேட்டி
டெல்லி: பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தீவிரவாதி என பாஜக எம்பி ரமேஷ் பிதுரி குறிப்பிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி சபையில் இருந்த இன்னொரு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடந்தது. கடைசி நாளான 22ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் (லோக்சபா) சந்திரயான்-3 வெற்றி தொடர்பான விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்று பேசினர். அப்போது பாஜக எம்பி ரமேஷ் பிதுரி பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலியை பார்த்து தீவிரவாதி என கூறினார். இதுமட்டுமின்றி இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‛இந்தியா' எம்பிக்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதினர்.
அதில் நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட ரமேஷை, சிறப்புக்குழு அறிக்கை தரும் வரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள டேனிஷ் அலியின் இல்லத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கே.சி வேணுகோபால் ஆகியோர் சென்று கலந்துரையாடினர்.

இந்நிலையில் தான் டேனிஷ் அலியை, ரமேஷ் பிதுரி தீவிரவாதி என அழைத்தது குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ரமேஷ் பிதுரி பயன்படுத்திய வார்த்தை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இந்த சம்பவம் நடந்தபோது நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி தொடர்ந்து பிரதமர் மோடியை 'நீச்' (வெறுக்கத்தக்கவர்) என்று அழைத்தார்.
அன்றைய விவாதத்தின்போது டேனிஷ் அலி, சவுகதா ராய் உள்பட பல உறுப்பினர்களின் பேச்சுகள் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க சபாநாயகர் ஓம்பிர்லாக்கு கடிதம் எழுதியுள்ளேன். டேனிஷ் அலி மட்டுமின்றி ம் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் சில தலைவர்கள் வழக்கமான குற்றவாளி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக எம்பிக்களை தூண்டி விடுவதற்காக அவர்கள் தரக்குறைவான கருத்துகளை கூறுகின்றனர்'' என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications