இந்திரா அறிவித்த எமர்ஜென்சி..தீரமிகு போராட்டங்கள், தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அமித்ஷா!
டெல்லி: 48 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அறிவித்த எமர்ஜென்சியின் போது நடந்த போராட்டங்கள், தியாகங்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
1975-ம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சி எனும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் எமர்ஜென்சி அமல்படுத்தபப்ட்டது. சுதந்திர இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு அரசு ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்திரா காந்திக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு கலைக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எமர்ஜென்சி சிறைவாசம் அனுபவித்தார்; சிறையில் கொடுமைகளை எதிர்கொண்டனர்.
எமர்ஜென்சியின் 48-வது ஆண்டை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித்ஷா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. பிரதமர் மோடி தமது ட்விட்ட ர் பக்கத்தில், எமர்ஜென்சிக்கு எதிராக- ஜனநாயகத்தைப் பாதுகாக்க தீரமுடன் போராடிய உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது தேசத்தின் வரலாற்றில் எமர்ஜென்சியின் கறுப்பு நாட்கள் மறக்க இயலாதவை என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 1975-ல் ஒரு குடும்பத்தால் எமர்ஜென்சி இந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாக சொந்த சுயநலன்களுக்காக எமர்ஜென்சியை அமல்படுத்தினர். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அப்போது பல லட்சம் பேர் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர். அத்தகைய தேசத்தைப் பாதுகாக்க தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம் என தெரிவித்துள்ளார் அமித்ஷா.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சித்ரவை- ஜெயில்- கொலை- ஊடக சுதந்திரம் பறிப்பு.. இதுதான் 1975-ம் ஆண்டு ஜூன் 25-ல் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியால் நிகழ்ந்தவை என கூறியுள்ளார். இதேபோல மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் எமர்ஜென்சியை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் #DarkDaysOfEmergency என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications