ஜி.கே.வாசன் வீட்டு வாசல் முன்பு விழுந்து கிடந்த சடலம்.. யார் அவர்?.. டெல்லியில் பரபரப்பு..!
ஜிகே வாசன் வீட்டுக்கு முன்பாக சாலையில் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிகே வாசனின் வீட்டுக்கு முன்பாக, சாலையில் சடலம் ஒன்று கிடந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சராகவும், டெல்லியில் மதிப்பு மிக்க தலைவராகவும் வலம் வருபவர் ஜிகே வாசன்..
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான வாசன், இப்போது மாநிலங்களவை எம்பியாகவும் உள்ளார்.. அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியிலும் இடம்பெற்று வருகிறார்.

அதிருப்தி
நேற்றைய தினம், தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருந்தார்.. இதுகுறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், "உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் முடிவு வரை தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை.. தேர்தலில் ஜனநாயகம் தோல்வி அடைந்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

செயற்கை தேர்தல்
ஆட்சியாளர்களுடைய தேர்தல் விதிமீறலே இன்றைக்கு அவர்களின் வெற்றிக்கு காரணம்.. இது இயற்கையான தேர்தலாக இல்லாமல் செயற்கையான தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.. இதையடுத்து, விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அவருடைய அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

டெல்லி வீடு
இந்நிலையில், டெல்லியில் ஜிகே வாசன் வீட்டு வாசலில் சடலம் ஒன்று விழுந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வீட்டு வாசலில் சடலம் கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாசனுக்கு டெல்லியில் அசோகா சாலையில் உள்ள பட்டேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அரசின் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது...

விசாரணை
இந்த வீட்டின் வாசலில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்... இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர்... அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.. அந்த இடத்தில் நபர் இறந்து கிடக்க காரணமும் தெரியவிலல்லை.. இதுகுறித்து விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.. எம்பி வீட்டு ஆண் சடலம் கிடந்ததால் டெல்லி போலீசார் பரபரப்பு அடைந்துள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications