நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.. வீரர்களின் தியாகத்தை போற்றிய பிரதமர் மோடி
Recommended Video

டெல்லி : டெல்லியில் நாடாளுமன்றத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
2001ம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 5 தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில் டெல்லி காவல்துறையை சேர்ந்த 6 பேர், நாடாளுமன்ற பாதுகாப்பில் இருந்த 2 வீரர்கள், ஒரு தோட்டக்காரர் என 9 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்ற தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 9 பேரின் உருவப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2001ம் ஆண்டில் நாடாளுமன்றத்தை காக்கும் பொறுப்பில் உயிரிழந்தவர்களின் நினைவை நாடு போற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய வெறுப்பும் பயங்கரமும் நிறைந்த சக்திகள் வெற்றி பெற முடியவில்லை என்றும், அவர்கள் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதலின்போது உயிர்த்தியாகம் செய்தவர்களின் வீரத்திற்கு, வீரவணக்கம் செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களின் துணிச்சலும், வீரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications