ஓபிஎஸ் மீதான தகுதி நீக்க வழக்கு: 3 வருடமா சபாநாயகர் தாமதம் செய்வது? ரொம்ப அதிகம்.. தலைமை நீதிபதி
டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான புகாரில் சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

வழக்கு
ஆனால் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் எடுக்கவில்லை. கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தள்ளுபடியான நிலையில், திமுக சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி
தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, தலைமையிலான அமர்வு இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு சார்பில், முகுல் ரோத்தகியும், திமுக சார்பில் கபில் சிபலும் ஆஜராகியுள்ளனர். அப்போது, சபாநாயகருக்கு இப்படித்தான் உத்தரவிட வேண்டும் என்றோ, எவ்வளவு காலக்கெடுவிற்குள் உத்தரவிட வேண்டும் என்றோ நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என்று, முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தாமதம் தேவையில்லை
இதனால், அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி, அதற்காக 3 வருடங்கள் முடிவெடுக்காமலா இருப்பீர்கள். இந்த பிரச்சினையில் 3 வருடமாக சபாநாயகர் காலதாமதம் செய்வது தேவையற்றது. 3 மாதங்களுக்குள் முடிவெடுங்கள் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வரலாறு உள்ளது. அந்த தீர்ப்பை கூட விட்டுவிடுங்கள். 3 வருடங்களாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது சரியல்ல என்றார்.

நோட்டீஸ்
சபாநாயகர் ஒரு விவகாரத்தின் மீது ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் முடிவெடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி நரிமன் சமீபத்தில் மணிப்பூர் சபாநாயகருக்கு உத்தரவிட்டிருந்தார். திமுக மனு மீது 3 வருடங்கள் ஆகியும் சபாநாயகர் முடிவெடுக்காமல் இருக்கிறார், என்று திமுக வக்கீல் கபில் சிபல் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, திமுக கொடுத்த மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்று விளக்கம் அளிக்க தமிழக சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை, பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications