கடலோர காவல் படை பதவி உயர்வில் முறைகேடு.. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட.. பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி: இந்திய கடலோர காவல்படையில் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது குறித்து இணை செயலாளரின் கீழ் உயர்மட்ட விசாரணைக்குப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடலோர காவல்படையில் பதவி உயர்வின் மூலம் கூடுதல் இயக்குநர் ஜெனரல் காலியிடம் நிரப்பப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

கடலோர பாதுகாப்ப படையில் உள்ள சில மூத்த அதிகாரிகள் இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த பதவி உயர்வு உத்தரவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .
மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்வு வாரியம் கலைக்கப்பட்டது. மேலும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இணை செயலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
அதாவது ஜூனியர் அதிகாரி ஒருவருக்கு முறைகேடான வகையில் சில மதிப்பெண்களைக் கூடுதலாக அளித்து, கூடுதல் இயக்குநர் ஜெனரல் பதவிக்கு அவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஊழலுக்கு எதிராக வலுவான கடுமையான நடவடிக்கைகள் அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
விசாரணையில் ஜூனியர் அதிகாரிக்கு முறைகேடான முறையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது உறுதியானால், இந்தியக் கடலோர காவல்படை சட்டத்தின் கீழ் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications