டெல்லி ஆசிட் கேஸில் ட்விஸ்ட்! மாணவி தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பழிவாங்கினாரா?
டெல்லி: தலைநகர் டெல்லியில் 20 வயது கல்லூரி மாணவி மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் மனைவி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். ’என்னை பலவந்தப்படுத்தி உறவு கொண்டார் என்றும், தொடர்ந்து என்னை பிளாக்மெயில் செய்து வந்தார்’ என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியின் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கல்லூரி மாணவி மீது ஊற்றினார்.

ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓட்டம்
இதில் படுகாயமடைந்து வலி தாங்க முடியாமல் அலறிய கல்லூரி மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து ஆசிட் வீசிய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும், போலீசாரும் ஆய்வு செய்தனர்.
ஆசிட் வீசிய நபரின் மனைவி பேச்சு
விசாரணையில், ஜிதேந்தர் என்ற நபர் தான் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசியது தெரியவந்தது. இவருக்கு கூட்டாளிகள் அர்மான், இஷான் உதவி புரிந்துள்ளனர். 3 பேரையும் போலீசார் தேடி வரும் நிலையில் டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சட்டப்பட்ட நபரின் மனைவி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.
கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்று ஆசிட் விசிய நபர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் மனைவி கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கூறியதாவது:- ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வீட்டில் சில நாட்கள் முன்பாக நான் பணியாற்றினேன்.
பலவந்தப்படுத்தி உறவு கொண்டார்
அப்போது என்னை பலவந்தப்படுத்தி உறவு கொண்டார். பின்னர் தொடர்ந்து என்னை பிளாக்மெயில் செய்து வந்தார். அந்தரங்க வீடியோக்களை காட்டி இப்படி நடந்து கொண்டார்" என்று கூறியுள்ளார். எனினும், இந்த குற்றசாட்டை நிராகரித்துள்ள ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் உறவினர், ஆசிட் வீச்சு சம்பவத்தை திசை திருப்பும் நோக்கத்தில், இப்படி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெண்ணின் தந்தை பயணத்தில் இருப்பதால் அவரால் இந்த குற்றச்சாட்டிற்கு உரிய முறையில் பதிலளிக்க முடியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications