Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தந்தை செய்த தவறுக்காக நாடகமாடிய கல்லூரி மாணவி.. டெல்லி ஆசிட் சம்பவத்தில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு தலைக்காதலால் இந்த சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீஸ் விசாரணையில் வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் தனது தந்தையின் பேச்சை கேட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த வழக்கில் நடைபெற்ற திருப்பங்களை பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

delhi-acid-attack-case-twist-victim-s-father-arrested-confessed-to-plotting-attack-to-frame-jitende

கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு

அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கல்லூரி மாணவி மீது ஊற்றியதாகவும், இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

போலீசார் விசாரிக்கும்போது, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, தன்னை ஜித்தேந்தர் என்பவர் ஒருதலைப்பட்சமாக காதலித்ததாகவும், அவரிடம் சரிவர பேசாததால் ஆசிட் வீசியதாகவும் கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் தனது தந்தையின் பேச்சை கேட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த வழக்கில் நடைபெற்ற திருப்பங்களை பார்க்கலாம்:

மொத்த சம்பவமே டிராமா

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டதாக கூறிய இளம்பெண்ணின் தந்தை அகில். இவர் தலைமறைவாக இருந்த நிலையில், டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மொத்த சம்பவமே ஒரு டிராமா என தெரியவந்துள்ளது. அதாவது, தனது மகளுக்கு ஆசிட் வீச்சில் காயம் அடைந்ததாக கூறப்பட்டதில் உண்மையில்லை.

ஆசிட் வீச்சு போலியாக ஜோடிக்கப்பட்டது

கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை தனது மகளே எடுத்து சென்று, கையில் ஊற்றிக்கொண்டு நாடகமாடினார் என்று கூறியுள்ளார். ஏனெனில், ஆசிட் வீசியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்தர் மனைவி, தனக்கு எதிராக துன்புறுத்தல் வழக்கு கொடுத்ததால் அவரை பழிவாங்குவதற்கான எனது அறிவுறுத்தலின் பேரில், இவ்வாறு தனது மகள் நடந்து கொண்டதாக கூறி போலீசாரையே தலை சுற்ற வைத்துள்ளார்.

இதையடுத்து அகில் மற்றும் அவரது மகளுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஆசிட் வீச்சு போலியாக ஜோடிக்கப்பட்டது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு புகாரளித்த இளம்பெண்:

டெல்லியில் அசோக் விஹார் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் இளம்பெண், நேற்று கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது தன்னை பின் தொடர்ந்து வந்த 3 பேர் ஆசிட்டை தன் மீது வீசியதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆசிட் வீச்சில் இருந்து தப்பிக்க கையால் தடுத்ததாகவும் இதில், கைகளில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். நாட்டின் தலைநகரான டெல்லியில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜிதேந்திரா என்ற நபர்தான் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

சிசிடிவி காட்சிகள்

இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது போலீசருக்கு உண்மை தெரியவந்தது. சம்பவம் நடந்த போது ஜிதேந்திரா கரோல் பாக் பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. கல்லூரி மாணவி கூறிய பைக்கும் கரோல் பாக் பகுதியில்தான் பார்க் செய்யப்பட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில்தான் உண்மை அம்பலமாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+