காதலியை 35 பீஸாக வெட்டிவிட்டு.. அல்தாப் செய்த "சைக்கோ" சிரிப்பு.. போலீசை துளைத்த 11 மர்மங்கள்.. ஐயோ!
டெல்லி: டெல்லியில் தனது காதலி சாரதாவை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 11 முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
அப்தாப் அமீன் - சாரதா இருவரும் டெல்லியில் மெஹ்ரவுளி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர்.இந்த நிலையில்தான் அமீனை திருமணம் செய்ய சாரதா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் வந்த சண்டையில் அமீன் சாரதாவை கொலை செய்துள்ளார். அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் அதை பிரிட்ஜில் வைத்து 18 நாட்களுக்கு தினமும் 2 பீஸ்களாக அப்புறப்படுத்தி உள்ளார். போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கு சாரதா
இந்த வழக்கில் சாரதாவின் உடல் பாகங்கள் என்று நம்பப்படும் 13 பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இவை தற்போது டிஎன்ஏ அனலைசிஸ் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. டிஎன்ஏ ரிசல்ட் வந்த பின்பே இதில் முடிவு தெரிய வரும். இது தொடர்பான விசாரணையின் போலீசாரிடம் முதலில் பேசும் போது அப்தாப் மிகவும் நம்பிக்கையாக பேசி இருக்கிறார். அதாவது தான் கொலையே செய்யவில்லை என்பது போல மிக நம்பிக்கையாக பேசி இருக்கிறார்.

கொலை
இதனால்தான் தொடக்கத்தில் போலீசாருக்கு இவன் மீது எந்த விதமான சந்தேகமும் வரவில்லை. ஆனால் இரண்டாவது முறை விசாரணை செய்த போது அப்தாப் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறான். அதன்பின்பே உடல் பாகங்கள் எங்கே இருக்கிறது என்று அவன் காண்பித்து உள்ளான். அதே சமயம் வாக்குமூலம் கொடுக்கும் போது இவன் இடை இடையே சிரித்து, சைக்கோ போல நடந்து கொண்டு இருக்கிறான். படத்தில் காட்டுவது போல சைக்கோத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறான்.

கேள்விகள்
இந்த வழக்கில் இன்னும் 11 மர்மங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த மர்மங்கள் வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
1. இந்த கொலை வெறும் கோபத்தில் செய்யப்பட்ட கொலையா?
2. இந்த கொலை பல மாதங்களாக திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா?
3. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எங்கே?

விடை கிடைக்காத கேள்விகள்
4. சாரதாவின் போன் எங்கே?
5.. கொலையாளி அணிந்து இருந் உடை எங்கே?
6. சாரதாவின் உடை எங்கே?
7. கொலைக்கு உண்மையில் திருமண திட்டம்தான் காரணமா? அல்லது வேறு காரணம் இருக்கிறதா?
8. கொலைக்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?

பெண்கள்
9. அல்தாப் வீட்டிற்கு வந்த இன்னொரு பெண் யார்? அவருக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா?
10. அப்தாப் வேறு பெண்களுடன் பழகி சாரதாவிற்கு துரோகம் செய்ததால் ஏற்பட்ட மோதலில் அப்தாப் கொலை செய்தாரா?
11. அப்தாப்பிற்கு மனோவியாதி எதுவும் உள்ளதா? அவன் சுயநினைவோடு இந்த கொலையை செய்தாரா?
போன்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

கொலை
இந்த கொலை தொடர்பாக டெல்லி போலீசார் 178 போலீஸ் நிலையங்களில் டெல்லியை சுற்றி விசாரணை செய்துள்ளனர். உங்களுக்கு கடந்த மே மாதத்தில் இருந்து பெண்ணின் உடல் பாகங்கள் எதுவும் கிடைத்ததா என்று விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல் அப்தாப் கொலைக்கு பின்பும் மிகவும் சாதாரணமாக விசாரணையில் பேசுகிறான். அப்படி என்றால் இவனிடம் வேறு எதுவும் திட்டம் இருக்கிறதா? தப்பிக்க ஏதாவது திட்டம் போட்டு இருக்கிறானா என்றும் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications