டெல்லி: 2-வது தேர்தல் அறிக்கை- இலவச கல்வியை பாஜக ஒழித்துவிடும்- அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
டெல்லி: டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் இலவச கல்வியையே ஒழித்துக் கட்டிவிடும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 2-வது தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. இதனை முன்வைத்து பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
70 தொகுதிகளக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மியும் பாஜகவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி தேர்தலுக்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்கின்றனர்.
மேலும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றுமே தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ2,500 திட்டத்தை அனைத்து கட்சிகளும் முன்வைத்துள்ளன. இதேபோல ரூ500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்கின்றன மூன்று கட்சிகளும்.
இந்த நிலையில் பாஜகவின் 2-வது தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பாஜக இன்று வெளியிட்ட 2-வது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- டெல்லி தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு கல்வி நிறுவனங்களில் மழலையர் கல்வி முதல் முதுகலை கல்வி வரை இலவசமாக வழங்குவோம்
- போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ15,000 வழங்கப்படும்.
- அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தின் கீழ் தலித் மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- வீட்டு பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்; ரூ10 லட்சம் ஆயுள் காப்பீடும் வீட்டுப் பணியாளர்களுக்கு பாஜக வழங்கும்.
- ஆட்டோ டாக்சி ஓட்டுநர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும்; ஆட்டோ டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ10 லட்சம் ஆயுள் காப்பீடு; ரூ5 லட்சம் விபத்து காப்பீடு, வாகன இன்சூரன்ஸ் வழங்கப்படும். ஆட்டோ டாக்சி ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கல்வியை ஒழிக்கப் போகும் பாஜக- அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் கிளினிக்குகளை மூடுவோம் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. அதேபோலவே டெல்லி மக்களுக்கு கிடைத்து வரும் இலவச கல்வியையும் பாஜக ஆட்சியில் அமர்ந்தால் ஒழித்துக் கட்டிவிடும் என்றார்.
-
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications