Delhi Exit Poll:டெல்லி எக்ஸிட் போல் முடிவுகள்- டிவி விவாதங்களை வழக்கம் போல புறக்கணிக்கும் காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் தொடர்பான டிவி விவாதங்களில் காங்கிரஸ் கட்சி இம்முறை பங்கேற்குமா? வழக்கம் போல புறக்கணிக்குமா? என்கிற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை.

லோக்சபா தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் எக்ஸிட் போல் முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள், டிவி சேனல்களுடன் இணைந்து வெளியிட்டன. அப்போது, எக்ஸிட் போல் முடிவுகள் பொதுவாக பிழையானதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பதால் இவற்றில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை; இது தொடர்பான டிவி விவாதங்களில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவும் மாட்டார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படியே எக்ஸிட் போல் டிவி விவாதங்களில் காங்கிரஸ் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவும் இல்லை.

delhi exit polls 2025 delhi election exit poll results 2025

இந்த நிலையில் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 4-வது முறையாக ஆட்சி அமைக்குமா? தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்யுமா? 27 ஆண்டுகளுக்கு பின் பாஜக ஆட்சியை பிடிக்குமா? காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்களாவது கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

இந்த நிலையில் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டதால் எக்ஸிட் போல் முடிவுகள்- தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன. இந்த எக்ஸிட் போல் முடிவுகளை முன்வைத்து டிவி சேனல்களில் விவாதங்களும் நடைபெற உள்ளன.

ஆனால் இந்த டிவி விவாதங்களில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்பார்களா? அல்லது வழக்கம் போல புறக்கணிப்பார்களா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனை முன்வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

டெல்லியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடம்தான் இப்போதைய தேவை. டெல்லியில் 5 முதல் 8 இடங்கள் வரை கிடைத்தாலே காங்கிரஸ், புதைகுழியில் இருந்து மீண்டு எழுந்ததாகவே கொண்டாடும். அதனால் டெல்லி தேர்தல் தொடர்பான டிவி விவாதங்களில் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்க வாய்ப்பு இருக்காது என்றே டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+