மொத்தம் 70.. 67 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி.. மீண்டும் நடக்குமா மேஜிக்? டெல்லி தேர்தல்.. முழு விவரம்
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபைக்கு வரும் 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஜனவரி 14ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இடையே, போட்டி நிலவி வருகிறது. ஆட்சி யாருக்கு என்பதை, 1.46 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

மொத்த ஓட்டுக்கள்
டெல்லியில் மொத்தம் 1,46,92,136 (1.46 கோடி) வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80.55 லட்சம் ஆண்கள். 66.35 லட்சம் பெண்கள் என்று டெல்லி தலைமை தேர்தல் அலுவலகம் (தலைமை நிர்வாக அதிகாரி) ரன்பீர் சிங் தெரிவித்தார். மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதி 70 தொகுதிகளிலுமே மிகப் பெரிய தொகுதியாகும். மத்தியாலா தொகுதியில் 4,19,935 வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 1,53,364 பெண்கள் மற்றும் 2,26,556 ஆண்கள் உள்ளனர்

கெஜ்ரிவால் தொகுதி
டெல்லி தேர்தலில் மொத்தம் 668 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கெஜ்ரிவால் போட்டியிடும் புது டெல்லி தொகுதியில், அதிகபட்சமாக 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், பட்டேல் நகர் தொகுதியில் 4 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். இதனால் புது டெல்லி தொகுதியில், பிரச்சாரம் அனல் பறந்து காணப்படுகிறது. கெஜ்ரிவாலை எதிர்த்தே இங்கு அதிக பிரச்சாரங்கள் நடக்கின்றன.

முந்தைய தேர்தல்
2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் 67 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது. 3 இடங்களில் பாஜக வென்றது. மூன்று முறை ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ச்சியாக ஆட்சியமைத்த காங்கிரசால், கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவால், இந்த சட்டசபை தேர்தலில், 3 தொகுதிகளைத்தான் வெல்ல முடிந்தது. அதுதான் டெல்லி மக்கள். அவர்கள் எப்படி முடிவு எடுப்பார்கள் என யாருக்கும் புரியாது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு பிப்ரவரி 8ம் தேதி, சனிக்கிழமை, காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கி, மாலை 6 மணிவரை நீடிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். மொத்தமே 70 தொகுதிகள்தான் என்பதால், மாலைக்குள், முழு விவரமும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications