போராடி கரை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 3 சீனியர் ஆம் ஆத்மி அமைச்சர்கள்
Recommended Video

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட சீனியர் ஆம் ஆத்மி அமைச்சர்கள் மிகப் பெரும் போராட்டத்துக்கு நடுவே வெற்றியை பெற்றுள்ளனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பல தொகுதிகளில் இரு கட்சிகளின் வேட்பாளர்களிடையே சொற்ப வாக்குகள் வித்தியாசம்தான் இருந்து வந்தது.

ஒருகட்டத்தில் டெல்லி பத்பர்கஞ்ச் தொகுதியில் ஆம் ஆத்மி மூத்த தலைவரான துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி முகத்தில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரவீந்தர்சிங் நேகி 15,271 வாக்குகளைப் பெற்றும் மணீஷ் சிசோடியா 13,844 வாக்குகளைப் பெற்றும் பின்னடைவை எதிர்கொண்டிருந்தார்.
ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏறுமுகம்தான்.. அவர் 59,589 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் ரவீந்தர்சிங் நேகி 57516 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
AAP leader Manish Sisodia takes out a roadshow to celebrate the party's performance in #DelhiPolls2020. He is leading by over 3000 votes from Patparganj Assembly Constituency. #DelhiElectionResults pic.twitter.com/IhiixLVAWE
— ANI (@ANI) February 11, 2020
இதேபோல் நஜப்கார் தொகுதியில் அமைச்சர் கைலாஷ் கலோட் ஒரு கட்டத்தில் 621 வாக்குகள் பின் தங்கி இருந்தார். பின்னர் விறுவிறுவென வெற்றி நடைபோட்டு 43056 வாக்குகளைப் பெற்றார். பாஜக வேட்பாளர் அஜீத் சிங் கர்காரி, 41303 வாக்குகளைப் பெற்று தோல்வியை சந்தித்தார்.
சாகுர் பஸ்தி தொகுதியில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஒரு கட்டத்தில் 52 வாக்குகள் பின் தங்கி இருந்தார். பின்னரும் கூட பாஜக வேட்பாளரை விட 300 வாக்குகள்தான் கூடுதலாக சத்யேந்திர ஜெயின் முன்னிலையில் இருந்து வருகிறார். இந்த நிலை பின்னர் மாறியது. சத்யேந்திர ஜெயின் , 44728 வாக்குகளையும் பாஜகவின் எஸ்.சி. வாட்ஸ் 38100 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் சீனியர் அமைச்சர்கள் தொடக்கத்தில் தடுமாறினாலும் தற்போது வெற்றியை பெற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications