டெல்லி: கொரோனா காலத்தில் கெஜ்ரிவால் தந்த ரூ5,000..மறக்காத ஆட்டோ ஓட்டுநர்கள்-இலவு காத்த கிளியாக பாஜக!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் ஆட்டோ ஓட்டுநர்களும் அவர்களது குடும்ப வாக்காளர்களும் கொரோனா காலத்தில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ரூ 5,000 உதவித் தொகை வழங்கியதை இன்றும் மறக்க முடியாது; அதனால் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய கட்சியாக ஆம் ஆத்மி கட்சியையே பார்க்கிறோம் என்கின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குகளை அள்ளலாம் என காத்திருந்த பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் பெரும்பகுதியான வாக்காளர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு என மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பதும் கூட டெல்லி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

டெல்லியில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் வாக்குகளும் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கின்றன. இதனால்தான் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஆட்டோ ஓட்டுநர்களின் பெண்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை என்கிற வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன.
2011-ம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களின் எண்ணிக்கை 1 லட்சம். தற்போது பதிவு செய்யப்பட்ட 8 கோடி மோட்டார் வாகனங்களில் 1.1% ஆட்டோ ரிக்ஷாக்கள் என கூறப்படுகிறது. இதனால் பல மடங்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனடிப்படையில்தான் டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் வாக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதனாலாயே அனைத்து அரசியல் கட்சிகளும் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்களின் வாக்குகளை இலக்கு வைத்தும் வாக்குறுதிகளை வாரி இறைத்தன. அதேநேரத்தில் கொரோனா காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ5, 000 வழங்கியதை நாங்கள் மறக்க முடியாது; ஆகையால்தான் எங்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக ஆம் ஆத்மி அரசாங்கத்தை பார்க்கிறோம் என்கின்றனர் டெல்லி ஆட்டோ ஓட்டுநர்கள். இத்தகைய வாக்காளர்களின் மனநிலைதான் டெல்லியில் பாஜகவின் எதிர்பார்ப்புகளில் மண் அள்ளிப் போடக் கூடிய சாத்தியம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications