டெல்லி கார் வெடிப்பில் அதிரடி.. கார் கொடுத்த ஜம்மு காஷ்மீர் நபர் கைது.. யார் இந்த அமீர் ரஷித் அலி?
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த வழக்கில் அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவர் கார் வெடிப்பை நிகழ்த்தி தற்கொலை தாக்குதல் பயங்கரவாதியான டாக்டர் உமருக்கு கார் வழங்கி உதவி செய்த வகையில்அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இந்த அமீர் ரஷீத் அலி யார்? பின்னணி என்ன? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் கடந்த 11ம் தேதி மாலை 6.52 மணிக்கு சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன.

இந்த கார் வெடிப்பில் 13 பேர் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கார் வெடிப்பை நிகழ்த்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் உன் நபி என்பது தெரியவந்தது. இவன் டாக்டர். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தான். இவனுடன் தொடர்புடைய அதே பல்கலைக்கழக டாக்டர் முஜாமிலை ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்தனர். இதையடுத்து போலீசில் சிக்காமல் இருக்க உமர் காரில் வெடிப்பொருட்கள் நிரப்பி செங்கோட்டை அருகே சென்று காரை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார். இதில் உமரும் இறந்தான்.
இந்நிலையில் தான் பயங்கரவாதி உமருக்கு உதவி செய்ததாக அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவர் தான் உமருக்கு காரை வழங்கி உள்ளார். அந்த காரில் தான் உமர் வெடிப்பொருட்களை நிரப்பி வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளார். தற்போது கைதான அமீர் ரஷீத் அலி காஷ்மீரை சேர்ந்தவர். இவர், டெல்லியில் பதுங்கி இருந்த நிலையில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி, விருதுநகர் உள்பட 3 இடங்களில் சுத்துப்போட்ட என்ஐஏ அதிகாரிகள்.. அதிரடி சோதனை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications