சூட்கேஸில் கெமிக்கல்.. நினைத்த இடத்தில் வெடிகுண்டு! டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதியின் பகீர் பிளான்
டெல்லி: இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் மிக மோசமான ஒரு குண்டுவெடிப்பு நடந்திருந்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட உமர் நபி குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் எங்கு வேண்டுமானாலும் வெடிகுண்டைத் தயாரிக்கும் வகையில் கையிலேயே மர்ம கருவியை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
டெல்லியில் இம்மாத தொடக்கத்தில் செங்கோட்டை அருகே திடீரென ஒரு கார் வெடித்துச் சிதறியது. சான்ட்னி சவுக்கில் நடந்த இந்த கார் குண்டுவெடிப்பில் சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மருத்துவர் உமர் உன் நபி என்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கார் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

என்ஐஏ அதிகாரிகள்
இந்தச் சம்பவத்தில் பின்னணி குறித்து இப்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பம் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்களை ஆங்கில ஊடகமான என்டிடிவி வெளியிட்டுள்ளது. அதாவது உமர் உன் நபி தனது கைவசம் சீக்ரெட் கருவி ஒன்றை வைத்திருந்தாராம். அதை வைத்தே பயங்கரவாத செயல்களுக்குத் தேவையான கருவிகளை அவர் உருவாக்கியுள்ளார்.
சீக்ரெட் கருவி
கிட்டத்தட்ட எங்கு வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை உருவாக்க முடியும் என்பதால் அவர் அந்த கருவியை வைத்துள்ளார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் பிடிபட்ட பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த தகவலை கூறியுள்ளனர். ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த உமர் உன் நபி, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்திய ரசாயனக் கலவையின் ஒரு சிறிய சோதனையைத் தனது பல்கலைக்கழக அறையிலேயே நடத்தியுள்ளார். இந்தத் தகவலைக் கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபரான முசாமில் ஷகீல் கூறியிருக்கிறார்.
சூட்கேஸ்
அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இந்த முசாமில் ஷகீல், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய ஏஜெண்டான மௌல்வி இர்ஃபான் அகமது என்பவரால் இந்த பயங்கரவாதக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை வட்டாரங்கள், "உமர் உன் நபி வெடிகுண்டை எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கும் வகையில் ஒரு பெரிய சூட்கேஸை கையில் வைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் அதை எப்போதும் கையில் எடுத்துச் செல்வாராம். இந்த சூட்கேஸில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான கெமிக்கல்கள் மற்றும் கண்டெயன்ர்களை வைத்திருப்பாராம்" என்றார்.
டெல்லி குண்டுவெடிப்பு நடந்த ஹூண்டாய் ஐ20 காரில், உமர் உன் நபி பாதி முடிக்கப்பட்ட வெடிகுண்டை எடுத்துச் சென்றதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் பயங்கரவாதிகள் ஹரியானாவில் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களை ஜம்மு காஷ்மீருக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டனர். அங்கு உமர் உன் நபி பெரிய அளவில் ஏதோ செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததால் பிளானை மாற்றியுள்ளனர்.
என்ன நடந்தது!
தீவிரவாதிகள் முதலில் நாடு முழுக்க பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்துள்ளனர். இருப்பினும், அப்போது தான் போலீசார் ஹரியானாவில் மிக பெரியளவில் வெடி மருந்துகளை கண்டுபிடித்தனர். இதனால் பதறிய தீவிரவாதிகள் வெடிகுண்டை வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications