பி.கே. வை கட்டி அணைத்த ஏ.கே.. பயங்கர குஷியில் ஆம் ஆத்மி.. கட்சி அலுவலகத்தில் வெற்றி குதூகலம்
டெல்லி: டெல்லியில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 3-ஆவது முறையாக வெற்றி பெறவுள்ள நிலையில் கட்சி அலுவலகத்துக்கு வந்த பிரசாந்த் கிஷோரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதில் ஆம் ஆத்மி 65 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இக்கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகத்தை வகுத்து தந்தவர் பிரசாந்த் கிஷோர்.
இந்த வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு முதல் தொண்டர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த அலுவலகமே திருவிழா போல் களைக் கட்டியுள்ளது.
கட்சி அலுவலகத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். பிரசாந்த் கிஷோர் வந்த போது அவருக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால் அவரை கட்டி அணைத்தார். இருவரும் வாழ்த்துகளையும் நன்றியையும் பரிமாறி கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications