3 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஜாமீன்.. கைது முதல் ரிலீஸ் வரை.. கெஜ்ரிவால் வழக்கில் நடந்தது இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று ஜாமீன் அளித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது முதல் ஜாமீன் கிடைத்தது வரை அவரது வழக்கு கடந்த வந்த பாதையை இங்கே பார்ப்போம்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது.

Delhi Arvind Kejriwal Court

நீதிமன்ற உத்தரவு சிறை நிர்வாகத்திற்கு கிடைத்ததும் நாளை கெஜ்ரிவால் விடுதலையாக உள்ளார். சரியாக 3 மாதங்கள் கழித்து கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையாக உள்ளார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது முதல் ஜாமீன் கிடைத்தது வரை அவரது வழக்கு கடந்த வந்த பாதையை இங்கே பார்ப்போம்.

டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கெஜ்ரிவால் அரசு புதிய கலால் கொள்கயை அறிமுகம் செய்தது. கலால் கொள்கையை அறிமுகம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதையடுத்து ஜூலை 2022 ஆம் ஆண்டில் சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார்.

* ஆகஸ்ட் 2022ல் டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
* செப். 2022-ல் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது
* அக். 30. 2023- கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
* நவம்பர் 2 ஆம் தேதி ஆஜர் ஆக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

* கெஜ்ரிவால் ஆஜர் ஆகாததால் அமலாக்கத்துறை மேலும் இரண்டு சம்மன் களை அமலாக்கத்துறை விடுத்தது. டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு சம்மன் விடுத்தது.
* ஜனவரி 2024: மேலும் இரண்டு சம்மன்கள் கெஜ்ரிவாலுக்கு விடுக்கப்பட்டது. ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஆஜராக வேண்டும் என்று அடுத்தடுத்து சம்மன் விடுத்தது. கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்ததால் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்தது.

* மார்ச் 7; சம்மனுக்கு ஆஜராகாமல் புறக்கணிக்கும் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக் கோரி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
* மார்ச் 15; கெஜ்ரிவால் சம்மனை புறக்கணிப்பதற்கு எதிரான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செஷன்ஸ் கோர்ட்டு மறுத்துவிட்டது.

* மார்ச் 16: செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனதையடுத்து கெஜ்ரிவாலுக்கு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம், ஆஜராகமல் தவிர்த்த வழக்கில் ஜாமீன் அளித்தது.
* மார்ச்: 21 கெஜ்ரிவாலை கைது செய்ய தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

*மார்ச் 23: தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்தது.
* ஏப்ரல்: 10: கெஜ்ரிவால் உச் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க்குவது குறித்து பரிசீலிப்பதாக கூறியது. இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் பிரசாரம் செய்வது என்பது அடிப்படை உரிமை இல்லை என்று அமலாக்கத்துறை கூறியது. அமலாக்கத்துறையின் வாதங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

* மே 10: உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்ததையடுத்து கெஜ்ரிவால் விடுதலை செயயப்பட்டார். ஜூன் 02 ஆம் தேதி சரண் அடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சரண் அடைய கூடுதல் அவகாசம் கேட்ட கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
* ஜூன் 02: இதையடுத்து கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கெஜ்ரிவால் ஜாமீன் கோரின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
* ஜூன் 20: இந்த மனுவை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்து இன்று உத்தரவிட்டது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. இதையடுத்து கெஜ்ரிவால் நாளை டெல்லி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதல செய்யப்பட உள்ளார். கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட உள்ளதால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+