"இரும்பு கம்பி சொருகி.." டெல்லியை அதிர வைத்த கூட்டு பலாத்கார புகாரில் மெகா ட்விஸ்ட்! அத்தனையும் பொய்
டெல்லி: தலைநகர் டெல்லியில் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் அரங்கேறி உள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் கூட்டுப் பலாத்கார புகார் அளித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே அந்த புகார் குறித்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில திடுக் தகவல்கள் தெரிய வந்து உள்ளது.

டெல்லி பெண்
டெல்லியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதாவது காஜியாபாத்தில் வாகனத்தில் வைத்து தன்னை 5 நபர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரைக் கைது செய்தனர். அதாவது 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சில நாட்களுக்கு முன் சாலையோரம் மீட்கப்பட்டார்.

கூட்டுப் பலாத்காரம்
அப்போது தான் அவர் தன்னை நான்கு பேர் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார். அவர்களுக்கும் இந்த பெண்ணுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து உள்ளது. அந்த விவகாரத்தில் இந்த கூட்டுப் பலாத்காரம் நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீார் நடத்திய விசாரணை பல திடுக் தகவல்கள் தெரிய வந்தது.

பொய் புகார்
அதாவது அந்தப் பெண் அளித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று இப்போது போலீசார் கூறி உள்ளனர். சொத்து விவகாரம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை இருந்த நிலையில், அவர்களைச் சிக்கவைக்க அந்த பெண் இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்து உள்ளது. இந்த விவகாரத்தில் இந்த சதியில் பெண்ணுக்கு உதவிய மூன்று ஆண்களையும் கைது செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் தகவல்
இது குறித்து மீரட் ஐஜி பிரவீன்குமார் கூறுகையில், "சொத்து தகராறு காரணமாக அவர்களைச் சிக்க வைக்க ஆசாத் என்ற நபருடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆசாத் தான் முக்கிய மாஸ்டர் மைன்டாக இருந்து உள்ளார். இந்த விவகாரத்தில் அவரது கூட்டாளிகள் கவுரவ் மற்றும் அப்சல் ஆகியோரையும் கைது செய்து உள்ளோம். அவர்களைப் பயன்படுத்திய ஆல்டோ காரையும் பறிமுதல் செய்தோம்.

நடந்தது என்ன
இது தொடர்பாக போலீசார் மேலும் கூறுகையில், "அந்த பெண்ணை நாங்கள் முதலில் காஜியாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அங்கு மருத்துவ பரிசோதனை செய்ய அவர் மறுத்துவிட்டார். மேலும், விசாரணையில் சம்பவம் நடந்த போது ஆசாத்தின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருநத்தை கண்டறிந்தோம். இது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் சதித் திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டார்" என்றார்..

என்ன புகார்
சொத்து விவகாரத்தில் ஐந்து பேரையும் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு பொய்யான புகாரைக் கொடுத்து உள்ளனர். கடந்த அக். 18இல் அந்தப் பெண் சாலையோரம் இருந்து மீட்கப்பட்ட நிலையில், போலீசார் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூட ட்வீட் செய்து இருந்தார்.

மகளிர் ஆணையம்
அந்தப் பெண் சாக்குப் பையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் அவரது அந்தரங்க பகுதிகளில் இரும்பு கம்பி செருகப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் கூட கூறி இருந்தார். இது சமூக வலைத்தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் தான் இது பொய்யான புகார் என்று தெரிய வந்து உள்ளது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications