ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு- கார்த்தி சிதம்பரம் ஆஜர்!
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜரானார்.
பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த காலத்தில் மத்திய நிதி அமைச்சராக 2006-ல் ப.சிதம்பரம் பதவியில் இருந்தார். அப்போது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்தது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு
ஏர்செல் நிறுவனத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ3,650 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு அப்போது அனுமதி அளித்தது. மத்திய நிதி அமைச்சரால் ரூ600 கோடி ரூபாய் வரைக்கு மட்டுமே அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி தர முடியாது. அதற்கு மேலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுதான் அனுமதி தர வேண்டும்.

என்ன முறைகேடு?
ஆனால் ப.சிதம்பரம் விதிமுறைகளை மீறி ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முறைகேடாக அனுமதி கொடுத்தார் என்பது புகார். இது தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இந்த முறைகேட்டில் ப.சிதம்பரத்துக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவியாக இருந்தார்; கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இந்த முதலீட்டு அனுமதிக்காக லஞ்சம் பெற்றது என்கின்றன சிபிஐ, அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகள். இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி வழக்கு
இவ்வழக்குகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 22-ந் தேதி நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் என்.கே.மட்டா, சி.பி.ஐ. சார்பில் நூர் ராம்பால் ஆகியோர் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதனையடுத்து இவ்வழக்கில் கூடுதல் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

ப. சிதம்பரத்துக்கு விலக்கு
இதனடிப்படையில் டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜராகி இருந்தார். ஆனால் ப.சிதம்பரம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரும் முறையான மனுவைத் தாக்கல் செய்து ஜாமீன் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications