டெல்லி: பாஜகவை மிரட்டும் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கை-மாணவருக்கு பேருந்தில் இலவசம்- மெட்ரோவில் சலுகை!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்காக 15 வாக்குறுதிகளுடனான தேர்தல் அறிக்கையை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், மெட்ரோ ரயில்களில் சலுகைகளில் பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி யூனியன் சட்டசபை தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கி இருக்கின்றன. ஆளும் ஆம் ஆத்மி கட்சியானது, பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 வழங்குவோம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் சஞ்சீவனி யோஜனா திட்டம், ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி மற்றும் ரூ. 10 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். 15 அம்ச வாக்குறுதிகளுடன் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- வேலைவாய்ப்புகளை உருவாக்க உத்தரவாதம்
- பெண்களுக்கு மாதம் வங்கி கணக்கில் ரூ. 2,100 செலுத்தப்படும்
- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
- முறையற்ற குடிநீர் கட்டணம் தள்ளுபடி
- 24 மணிநேர குடிநீர் விநியோகம்
- ஐரோப்பாவைப் போல சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்
- அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஸ்காலர்ஷிப் திட்டம்
- யமுனை நதியை தூய்மைப்படுத்துவோம்
- மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசம்
- மாணவர்களுக்கு மெட்ரோ ரயில்களில் சலுகை
- அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ. 18,000 உதவித் தொகை
- வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வசதி
- ரேஷன் கார்டுகள் முறையாக விநியோகிக்கப்படும்
- ஆட்டோ டாக்சி ஓட்டுநர்களின் பெண் குழந்தைகள் திருமணத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி
- ஆட்டோ டாக்சி ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், ஆயுள் காப்பீட்டு திட்டம்
-
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications