குப்பைக்கு போகும் ரூ.3.2 கோடி? இவ்வளவு செலவழித்தும் சொட்டு மழை கூட பெய்யல.. பயங்கர குழப்பம்!
டெல்லி: காற்று மாசு டெல்லியில் மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த சுமார் 3.2 கோடி செலவு செய்து மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சிகள் நடந்தன. இருப்பினும், இதுவரை அங்குப் பெரியளவில் மழை பெய்யவில்லை. அங்கு நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தின்போது காற்று மாசு உச்சத்திற்குப் போய்விடும். அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பு உட்பட பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்குக் கூட கடந்த ஆண்டுகளில் நிலைமை மோசமாகி இருக்கிறது.

காற்று மாசு
பொதுவாகவே காற்று மாசு அதிகமாக இருக்கும்போது மழை பெய்தால் மாசு ஓரளவுக்குக் குறையும். ஆனால், டெல்லியில் குளிர் காலத்தில் அவ்வளவு சீக்கிரம் மழை பெய்யாது. இதுவே நிலைமையை மோசமானதாக மாற்றும். இந்தாண்டும் காற்று மாசு அதிகமாக இருக்கும் சூழலில் நிலைமையைச் சமாளிக்கச் செயற்கை மழையை உருவாக்க முயற்சிகள் நடத்தப்பட்டது. மேக விதைப்பு மூலம் மழையை உருவாக்கத் திட்டமிட்டனர்.
இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வாளர்கள் டெல்லியில் மேக விதைப்பை முயன்றனர். இருப்பினும், அங்குக் கடைசி வரை மழை எதுவும் வரவே இல்லை. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி திணறுகிறது.
தீர்வை தராது
அதேநேரம் மேக விதைப்பு மூலம் செயற்கை மழையை உருவாக்குவது காற்று மாசை நிரந்தரமாகக் கட்டுப்படுத்தாது என்றும் இதற்கு அதிகச் செலவும் ஆகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். செயற்கை மழை தற்காலிகமாக ஓரிரு நாட்கள் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்களை அடக்கினாலும், அவை சில நாட்களில் மீண்டும் வந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்..
மேக விதைப்பு பரிசோதனைக்காக டெல்லி அரசுக்கும் கான்பூர் ஐஐடி-க்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து முறை மேக விதைப்புக்கு ₹3.2 கோடி ஒதுக்கப்பட்டது. அதாவது ஒரு முறை மழையை உருவாக்கும் முயற்சிக்கு ரூ.64 லட்சம் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தாலும் கூட மழை வரும் என்பது உறுதியில்லை.
பலன் இல்லை
வடக்கு டெல்லியில் மூன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் அவற்றில் எந்தவொரு முயற்சியிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களாகவே டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு மிக மோசமாகவே இருப்பதால் மேக விதைப்பு பயன் தரவில்லை என்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநர் அனுபமிதா ராய்சவுத்ரி கூறுகையில், "மேக விதைப்பிற்குப் பிறகு நகரில் பெரியளவில் மழை எதுவும் பெய்யவில்லை.. மழை மாசுகளைத் தற்காலிகமாகக் குறைத்தாலும் கூட அவை மீண்டும் அதிகரிக்கும்.
மழை மூலம் சில மணி நேரம் முதல் அதிகபட்சம் ஓரிரு நாட்கள் வரை மட்டுமே காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியும். இது நிலையானது இல்லை.. குளிர்காலம் முழுக்க இதைத் தொடர்ந்து செய்ய முடியாது. அதற்குப் பதிலாகக் கடுமையான விதிகளை அமல்படுத்துவதில் இந்த பட்ஜெட்டை செலவழிக்க வேண்டும். அப்போது தான் காற்று மாசு குறையும்" என்றார்.
சிக்கல் என்ன
டெல்லியில் குளிர்காலத்தில் வானிலை பொதுவாக மிகவும் வறண்டதாக இருக்கும் என்றும் காற்றில் மிகக் குறைந்த ஈரப்பதம் இருக்கும் என்பதால் செயற்கை மழையைப் பெய்ய வைக்க முடியாது என டெல்லி ஐஐடி வளிமண்டல அறிவியல் மைய உதவிப் பேராசிரியர் ஷாசாத் கனி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "டெல்லியில் வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் காரணமாக மட்டுமே குளிர்காலத்தில் மழை பெய்யும். அப்போது மேக விதைப்பு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
அதேநேரம் மேக விதைப்பின் காரணமாக ஒரே நேரத்தில் அதிகப்படியான மழை கொட்டித் தீர்க்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது. மழையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அப்போது உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் கூட ஏற்படலாம். அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? ஸ்மோக் டவர்கள், ஸ்மோக் கன்கள் மற்றும் மேக விதைப்பு என சர்வயோக நிவாரணி போன்ற தீர்வுகளை நோக்கியே நாம் செல்கிறோம். ஆனால், உண்மையில் நாம் படிப்படியாகக் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் யாரும் கவனம் செலுத்துவது இல்லை" என்றார்.
என்ன செய்யலாம்!
டெல்லியில் காற்றுத் தரத்தை மேம்படுத்தப் போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் மாசு ஏற்படுவதைக் குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் சுனில் தஹியா கூறினார். அந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமல் காற்று மாசை நிரந்தரமாகக் குறைக்கவே முடியாது என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "மேக விதைப்பு உள்ளிட்டவை குறுகிய பலன்களைக் கொடுத்தாலும்.. அவை நீண்ட கா தீர்வுகள் அல்ல. காற்று மாசை அணுகும் முறையே மாறினால் மட்டுமே நமக்குத் தீர்வு கிடைக்கும்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications