Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்.. டெல்லி விவசாயிகள் போராட்டம் திடீரென தற்காலிகமாக வாபஸ்.. என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை பிப்.29ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப் போவதாக விவசாயச் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Delhi Farmers March will be Paused Till Feb 29 and Protesters are planning to having Ground At Borders

டெல்லி எல்லையை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வந்தது.

தற்காலிகமாக வாபஸ்: இதற்கிடையே இந்த 'டெல்லி சலோ' போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாகப் பிப்ரவரி 29ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் விவசாயச் சங்கத் தலைவர்கள் அறிவித்தனர். அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட அனைத்து போராட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகப் போராட்டத்தை நடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்புகள் அறிவித்துள்ளன.

அதுவரை, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி ஆகிய இரு இடங்களில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அங்கே இன்று மெழுகுவர்த்தி ஊர்வலமும், நாளை விவசாயிகள் தொடர்பான கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன. மேலும், பிப்ரவரி 26 அன்று, போராட்டக்காரர்கள் உலக வர்த்தக அமைப்பின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளனர். இப்படிப் பல வகைகளில் போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

போலீஸ் கோரிக்கை: டெல்லியில் போராடும் விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அம்பாலா போலீசார் அறிவித்த நிலையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று விவசாயச் சங்கத்தின் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

விவசாய தலைவர்கள்: முன்னதாக இது குறித்துப் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாத், பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்றார். அவர் மேலும் கூறுகையில், "காடுகளில் வாழும் மக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்றனர். வனப்பகுதியான பீகாரில் இருந்து ஆந்திரா வரை ஆதிவாசிகள் 'காட்டை' வழிபடுகின்றனர்.

எந்த ராணுவமும் விவசாயிகளும் நேருக்கு நேர் நிற்கவில்லை. சொல்லப்போனால் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்களும் ராணுவத்தில் உள்ளனர். எனவே, மோதலை விட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" என்றார்.

இளம் விவசாயி மரணம்: முன்னதாக கடந்த புதன்கிழமை விவசாயிகளுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 21 வயதே ஆன விவசாயி சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் பஞ்சாப் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உயிரிழந்த விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இருப்பினும், இதை ஏற்க மறுக்கும் விவசாயிகள் மரணம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+