டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராம்லீலா முதல் ஜந்தர் மந்தர் வரை.. விவசாயிகள் பெரும் போராட்டம்.. போலீஸ் கடும் திணறல்!

டெல்லியில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகள் பெரும் போராட்டம்.. போலீஸ் கடும் திணறல்!-வீடியோ

    டெல்லி: டெல்லியில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். டெல்லி தெருக்களில் உருண்டு புரண்டு விவசாயிகள் போராடுகிறார்கள். இவர்கள் தற்போது ஜந்தர் மந்தரில் போராட்டம் செய்து வருகிறார்கள்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு மத்திய ரிசர்வ் படை போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது.

    அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் இன்று விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு உள்ளனர்.

    [அய்யாக்கண்ணு அன்று கொளுத்தி போட்ட திரி.. இன்று பற்றி எரிகிறது டெல்லி! ]

    ராம்லீலா மைதானம்

    ராம்லீலா மைதானம்

    முதலில் ராம்லீலா மைதானத்திற்குள்தான் போலீசார் விவசாயிகளை போராட அனுமதித்து இருந்தனர். அங்கு அமைதியாக போராட வேண்டும் என்று கூறி இருந்தனர். நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விவசாயிகள் அங்குதான் முழக்கமிட்டு வந்தனர்.

    அனுமதிக்காத போலீஸ்

    அனுமதிக்காத போலீஸ்

    ஆனால் இன்று காலை விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாக கூறினார்கள். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து 30,000 போலீசார் அங்கு உடனடியாக களத்தில் குதித்தனர்.

    வெளியேறிய விவசாயிகள்

    வெளியேறிய விவசாயிகள்

    ஆனால் விவசாயிகள் நிறைய பேர் இருந்த காரணத்தால் போலீசால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மத்திய ரிசர்வ் படைத்தான் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் விவசாயிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அங்கு இருந்த போலீசின் தடையை மீறி விவசாயிகள் சாலைக்கு வந்தனர். போலீஸ் தடையை மீறி தங்கள் பேரணியை தொடங்கினார்கள்.

    மாலை பெரிய திட்டம்

    மாலை பெரிய திட்டம்

    இவர்கள் தற்போது ஜந்தர் மந்தரில் போராட்டம் செய்து வருகிறார்கள். அங்கிருந்து இப்போது அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று மாலை இவர்கள் இன்னும் பெரிய போரட்ட திட்டங்களை வைத்து இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், மாலை நிர்வாண போராட்டம் நடத்த இருப்பதாக கூறியுள்ளனர்.

    English summary
    Delhi Farmers Protest: Control got out of the Police hands.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X