அதிகாலையில் பயங்கரம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ.. டெல்லி தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலி
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவேக் விஹார் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். விவேக் விஹாரில் உள்ள 4 மாடிக் கட்டிடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் முக்கியப் பகுதிகளில் ஒன்று விவேக் விஹார்.. ஜன நெருக்கடி அதிகமாக உள்ள பகுதியான இங்கு இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்து, அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. அதிகாலை நேரத்தில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

நடந்தது என்ன?
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3- 4 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்தவும், மீட்புப் பணிகளுக்காகவும் சுமார் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நான்கு மாடி குடியிருப்பு
டெல்லியின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள விவேக் விஹாரில் இன்று அதிகாலை சுமார் 3-4 மணியளவில் இந்த நான்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தொடங்கிய தீ, விரைவாக நேரத்திற்குள் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 6 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக அருகே உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், கட்டிடத்தின் பால்கனி வழியாக சுமார் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதிகாரிகள் சொல்வது என்ன
இந்த விபத்து தொடர்பாக ஷாதாரா டிசிபி ராஜேந்திர பிரசாத் மீனா கூறுகையில், "அதிகாலை 4 மணிக்குத் தகவல் வந்ததும் போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்தோம். பலரைப் பாதுகாப்பாக மீட்டோம். உயிரிழந்தோரின் உடல்களும் மீட்கப்பட்டு, தடயவியல் ஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்!
இந்த மோசமான தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், ஏசி வெடித்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். ஏசியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே தீ பரவியதாக ஒரு குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அதை அதிகாரிகள் யாரும் உறுதி செய்யவில்லை.
கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், தொடர்ச்சியாக ஓடும் ஏசிக்களில் ஏற்படும் மின் கசிவு அல்லது அதிகப்படியான வெப்பம் இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாக அமைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், விசாரணைக்கு பிறகே காரணம் உறுதியாகத் தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, நான்கு உயிர்களைப் பறித்துச் சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications