இந்தியா உலகையே வழிநடத்துதே.. பாரிஸ் ஒப்பந்தத்தை வலுப்படுத்திய டெல்லி பிரகடனம்! அதென்ன கிளீன் எனர்ஜி
டெல்லி: பருவ நிலை மாற்றத்துக்கு எதிரான பாரிஸ் ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் டெல்லி ஜி 20 மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ஜி 20 உச்சி மாநாடு நேற்று தலைநகர் டெல்லியில் தொடங்கி இருக்கிறது. முதல் நாளான , பிரதமர் நரேந்திர மோடி, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரின் ஒப்புதலுடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பில், காலநிலை மாற்றம், சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொள்ள ஜி-20 உறுப்பு நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐநாவின் பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜி-20 உறுப்பு நாடுகள் 2024 ஆம் ஆண்டில் புதிய குழு அளவுக்கான நிதி (NCQG) ஐ ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவிலிருந்து இந்த நிதியை தொடங்க வேண்டும். வளரும் நாடுகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்கள் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப 2025 ஆம் ஆண்டுக்குள் பருவ நிலை மாற்றத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை 2019 ஆம் ஆண்டு அளவிலிருந்து குறைந்தது இரட்டிப்பாக்க வேண்டும்.
ஜி-20 உறுப்பு நாடுகள் சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தியா ஜி 20 உச்சி மாநாட்டில் கிளீன் எனர்ஜிக்கானன வலுவான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. உலகின் 3 வது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரும் நுகர்வாளருமான இந்தியா, அதன் கரிம நடுநிலை இலக்கை அடைய 2070 ஆம் ஆண்டுக்குள் கிளீன் எனர்ஜியை பயன்படுத்துவதற்கான தனது முயற்சிகளை விரிவுபடுத்தும் என அறிவித்து உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சோலார் கூட்டணியுடன் இந்தியா இணைந்து 2015 ஆம் ஆண்டில் சுத்த மற்றும் மலிவு சூரிய ஆற்றலை அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் மாற்றும் நோக்கில் சர்வதேச சோலார் கூட்டணியை (ISA) தொடங்கியது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் மின்சாரத்தில் 20% எத்தனால் கலப்பதை இரட்டிப்பாக்க இந்தியா திட்டமிட்டு உள்ளது.
ஜி 20 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி உலகத் தலைவர்களிடம், இந்தியா கிளீன் எனர்ஜி திட்டங்களை முன்னெடுக்க உறுதிபூண்டு உள்ளதாகவும், உலகம் முழுவதும் அதை ஊக்குவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அதேபோல் உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டமைப்பும் இந்த கூட்டமைப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதேபோல், உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டமைப்பை இந்தியா ஜி 20 மாநாட்டில் அறிவித்து உள்ளது. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை தொடக்க உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த கூட்டமைப்பு, பசுமை எரிபொருள்களின் வர்த்தகத்தை எளிதாக்கி, உலக அளவில் பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும்.
பசுமை எரிபொருள்கள் என்பது தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள் போன்ற புதுப்பிக்கத்தக்க கழிவுகளில் இருந்து பெறப்படும் எரிபொருள்கள் ஆகும். பசுமை எரிபொருள்கள் வெப்பமண்டல மாற்றத்தைக் குறைக்க உதவும். இதனை கிளீன் எனர்ஜி என்று அறிமுகப்படுத்தி இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் கொண்டு சென்று பருவ நிலை மாற்றத்திற்கான முக்கிய தீர்வாக இந்தியா முன்வைத்து உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications