என் மீதே ஊழல் புகாரா? சாட்டையை சுழற்றும் டெல்லி ஆளுநர்.. சிக்கலில் ஆம் ஆத்மி தலைவர்கள்
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி தலைவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க டெல்லி ஆளுநர் முடிவு செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. மேலும் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
டெல்லி அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. உடனே கெஜ்ரிவால் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி ஆதரவை உறுதி செய்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று கூடிய டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பதவி விலக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி வந்தனர்.

ஆளுநர் சக்சேனா
அதற்கு பதிலடியாக ஆளுநர் சக்சேனா பதவி விலக வேண்டும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தபோது காதி மற்றும் கிராமபுற தொழிற்சாலைகள் ஆணைய தலைவராக இருந்த ஆளுநர் சக்சேனா ஊழலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சிபிஐ குற்றப்பத்திரிகை
ஆளுநர் சக்சேனா மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐ ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு இருப்பதாகவும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து உள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். இந்த புகாரை ஆளுநருக்கு எதிராக சிலர் திருப்பி விடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்போகும் ஆளுந
இந்த நிலையில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவதூறு பரப்பியதாக ஆளுநர் வி.கே.சக்சேனா ஆம் ஆத்மி தலைவர்கள் சவுரவ் பரத்வாஜ், அதிசி, துகேஷ் பதக் மற்றும் ஜாஸ்மின் ஷா ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவைக்கை மேற்கொள்ள இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications