இனி எங்கே போவோம்? டெல்லி கலவரத்தை அடுத்து.. கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிப்பு.. பரபரப்பு வீடியோ!
டெல்லி: டெல்லி அனுமன் ஜெயந்தி கலவரத்தை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டிடங்களை கட்டி இருப்பவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மூலம் இன்றும் நாளையும் அங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன.
Recommended Video
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. இதுவரை ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கலவரம் செய்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடும் கட்டி இருப்பவர்களின் கட்டிடங்களை மட்டுமே இடிக்கிறோம், மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று வடக்கு டெல்லி மாநகராட்சி கூறியுள்ளது.

நோட்டீஸ்
இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்கள், கடைகள் இடிக்கப்பட உள்ளதாக முன்பே மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. ஆக்கிரமிப்பு இடங்களில் இருப்பவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அங்கு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி அதிகாரிகளின் படை வந்தது. இவர்கள் மொத்தம் 9 புல்டோசர்களை கொண்டு வந்து இருந்தனர்.

துணை ராணுவம்
இந்த கட்டிட இடிப்பு பணிகளை ஒட்டி அங்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் டிரோன்கள் அங்கே களமிறக்கப்பட்டு கலவரம் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 400 போலீசார் கலவரம் நடந்த இடத்திலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆக்கிரமிப்பு
இன்று ஆக்கிமிரப்பு நிலங்களை அதிகாரிகள் அகற்ற சென்ற போது அங்கு சிலர் தாங்கள் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற மாட்டோம் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் கண்டிப்பு காட்டினர். நீங்கள் இருக்கும் பகுதி ஆக்கிரமிப்பு நிலம், உடனே வெளியேறுங்கள். முன்பே உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டோம். அதனால் உடனே வெளியேறுங்கள் என்று போலீசார் அவர்களிடம் குறிப்பிட்டனர்.

மக்கள் கதறல்
இடைஞ்சலாக இருந்தால் உங்களை கைது செய்ய நேரிடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கடைசி நேரத்தில் பல வீடுகள் மற்றும் கடைகளில் இருந்தவர்கள் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டே வெளியேறினர். கண்ணீர்விட்டபடி, அழுதுகொண்டே பலர் அங்கு கடைகளை காலி செய்தனர். இங்கு இடிக்கப்படும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகள், வீடுகள் எல்லாம் இஸ்லாமியர்களுடையது என்று கூறப்படுகிறது. அந்த பகுதியே இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியாகும்.

என்ன சொன்னார்கள்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. மக்கள் கடைசி நேரத்தில் பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து காலி செய்து வருகிறார்கள். எங்கள் கட்டிடங்களை இடிக்க போகிறார்கள் என்று தெரியும். இங்கே புல்டோசர்கள் வருகின்றன. எங்களுக்கு நோட்டிசும் வந்துள்ளது. அதனால் கடைகளை காலி செய்து வெளியேறி வருகிறோம். இனி எங்கே செல்வது என்று தெரியவில்லை.

வீடியோ
நாங்கள் இனி எப்படி பணி செய்வது என்று தெரியவில்லை என்று அங்கு கடை வைத்திருந்த பலர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. முக்கியமாக அங்கு இருக்கும் இஸ்லாமியர்களின் கடைகள்தான் அதிகம் குறி வைக்கப்பட்டு உள்ளது. பல இஸ்லாமியர்கள் விவரம் அறிந்து காலையிலேயே கடைகளை காலி செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இன்னும் சிலர் தற்போது அங்கு கடைகளை காலி செய்து வருகிறார்கள்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications