பூட்டப்பட்ட மக்கள்.. உடைக்கப்பட்ட மசூதியின் சுற்றுச்சுவர்.. டெல்லியில் நடந்தது என்ன? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட கட்டிடங்களை இடித்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு இருந்த மசூதி ஒன்றின் சுற்றுசுவரையும் இடித்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

வடஇந்தியாவில் கலவரங்கள் ஏற்படும் பகுதியில் உள்ள ஆக்கிமிரப்பு நில கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இஸ்லாமியர்களின் வீடுகள், கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த கலவரங்களுக்கு பின்பாக இது போல கட்டிடங்கள் பல இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. இதுவரை ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

9 மணிக்கே தொடங்கியது

9 மணிக்கே தொடங்கியது

இந்த கலவரம் முடிந்த 4 நாட்களில் அங்கு ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கும் உத்தரவை போட்டுள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு செய்யப்பட வேண்டிய இடிப்பு பணிகள் காலையே 9 மணிக்கு தொடங்கிவிட்டது. 400 போலீசார், 1250 துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு இங்கு கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன.

நோட்டீஸ் இல்லை

நோட்டீஸ் இல்லை

இங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் பலர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் எங்களுக்கு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. செய்தி பார்த்துதான் நாங்களே கண்டுபிடித்தோம். கடை வாசலில் வந்து, போர்ட் இருக்கும் பகுதிகளை மட்டும் அகற்றுவோம் என்று கூறிவிட்டு மொத்தமாக கடைகளை இடித்துவிட்டனர். இஸ்லாமியர்களின் கடைகளை தேடி தேடி இடித்தனர். இது பழி வாங்கும் நடவடிக்கை போல தெரிகிறது என்று இஸ்லாமியர்கள் கூறி உள்ளனர்.

பூட்டப்பட்டது

பூட்டப்பட்டது

அதோடு அங்கு மக்கள் பலர் சில இடங்களில் வைத்து பூட்டப்பட்டனர். மக்களை வீடுகள், கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் இடங்களை அதிகாரிகள் உடைத்தனர். இதில் அங்கு இருந்த மசூதி ஒன்றின் வெளிப்புற சுற்று சுவர் இடிக்கப்பட்டது. ஜாமியா மசூதி அது என்பது குறிப்பிடத்தக்கது. மசூதியை அடுத்து இருந்த இஸ்லாமியர்களின் இரண்டு கடைகளும் மொத்தமாக உடைக்கப்பட்டது. ஆனால் மசூதியின் வெளிப்புற சுற்று
சுவர் தவிர மற்ற பகுதிகள் உடைக்கப்படவில்லை.

பிரச்சாரம்

பிரச்சாரம்

முன்னதாக இங்கு இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடைக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்தே உள்துறை அமைச்சகத்திடம் போலீஸ் அனுமதியுடன் அங்கு கட்டிடங்கள் இடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கட்டிட இடிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

 2 மணி நேரம் லேட்

2 மணி நேரம் லேட்

இதையடுத்து அங்கு வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்பும் 2 மணி நேரமாக அங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. கோர்ட் ஆர்டர் கைக்கு வரவில்லை என்று கூறி அங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு உடனடியாக டெல்லி மாநகராட்சியிடம் கொடுக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தடை உடனே அமலுக்கு வர வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா கோர்ட் ரிஜிஸ்டரிடம் உத்தரவிட்டார்.

இந்துக்களும் தான்

இந்துக்களும் தான்

தலைமை நீதிபதி மீண்டும் தலையிட்ட பின்பே அங்கு இடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் சில இந்துக்களின் கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன. கணேஷ் என்ற இந்து இணையத்தில் வெளியிட்ட வீடியோவில், என் கடையை உடைத்துவிட்டனர். கடைக்கான நில ஆவணம் என்னிடம் இருந்தது. ஆனால் அதை பார்க்க கூட அதிகாரிகள் தயாராக இல்லை. அதற்குள் இடித்துவிட்டனர் என்று கூறி கண்ணீர்விட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+