ப.சி. மீதான ஐஎன்எக்ஸ் வழக்கு:குற்றம்சாட்டப்பட்டோர் ஆவணங்களை பார்வையிட தடை கோரிய சிபிஐ மனு டிஸ்மிஸ்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பினர் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு தடை கோரி சி.பி.ஐ.தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
2007-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனமானது மொரீசியஸ் நிறுவனங்களிடம் இருந்து ரூ305 கோடி அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்காக அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் இதற்கான அனுமதியை வழங்கியது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இந்த அனுமதியில்தான் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக 2008-ல் நிதி அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவு சந்தேகம் எழுப்பியது. பின்னர் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மீது 2010-ல் மும்பை அமலாக்க துறை, அன்னிய செலாவணி சட்டங்களை மீறியதாக வழக்கு தொடர்ந்தது.
மேலும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்கள் ஆதாயம் அடைந்ததாக 2017-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்குகளில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கின் ஆவணங்களை குற்றம்சாட்ட தரப்பினர் ஆய்வு செய்வதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் ஆவணங்களை ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்த சிபிஐயின் இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா விசாரித்து கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இவ்வழக்கில் இன்று சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி முக்தா குப்தா தீர்ப்பளித்தார். சிபிஐ தரப்பில் அனுபம் எஸ். சர்மா, குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பிரமோத்குமார் துபே, சித்தார்த் அகர்வால் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். டெல்லி உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு சிபிஐ தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications