அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு - மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரியும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'அக்னிபாத்' திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்னர் தீவிர போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஒருங்கிணைந்த பதிலத் தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கெனவே எதிர்ப்புகள், போராட்டங்கள் இந்த திட்டத்திற்கு எதிராக நடந்திருந்தாலும் சமீபத்தில் இந்த திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இதற்கு 80 ஆயிரம் பெண்களுக்கு மேல் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம்

திட்டம்

ராணுவம�� மற்றும் இதர பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி, 17.5 வயதிலிருந்து 21 வயது உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களில் 75% பேர் 4 ஆண்டுகள் மட்டுமே இந்த பணியில் நீடித்து இருக்க முடியும். மற்ற 25% பேர் மட்டுமே பணி நீட்டிப்பு செய்யப்படுவார்கள். இவ்வாறு 4 ஆண்டுகள் மட்டும��� ணியாற்றுபவர்கள் 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவார்கள்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆனால் இந்த 4 ஆண்டுகள் பணியை முடித்து திரும்பும் அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியமோ, பணிக்கொடையோ வழங்கப்படாது. இதுதான் இந்த திட்டத்தை எதிர்க்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் உட்சபட்ச தியாகமான உயிர் தியாகத்தை கோரும் ஒரு பணியில், பணி பாதுகாப்பு இல்லாமல் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியேற்றப்பட���ம் எனும் நிலை மிகவும் தவறானது என்றும் அரசியல் கட்சியினர் இந்த திட்டம் குறித்து விமர்சித்தனர்.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சதீஷ் சந்தர் சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர�� அடங்கிய அமர்வு, இத்திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஆயுதப்படைகளில் நிலுவையில் உள்ள பல்வேறு ஆட்சேர்ப்பு செயல்முறைகள் குறித்து தனி பதில் நகலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

போராட்டம்

போராட்டம்

முன்னதாக இத்திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் க��ந்த ஜூலை 19 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதேபோல இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இந்த திட்டத்திற்கு எதிராக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்
நடைபெற்ற போராட்டத்தால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மட்டுமல்லாது 80க்கும் அதிகமான ர��ில் பெட்டிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+