மத்திய அரசிடம் இருந்த ரூ5 லட்சம் கோடி மதிப்பு- 70,000 கிலோ 'ஹெராயின்' மாயம்- ஹைகோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: மத்திய அரசு பறிமுதல் செய்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் மாயமானது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2018-ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலத்தில் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் காணவில்லை என்பது பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கு. மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இப்போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்திய அரசு பறிமுதல் செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கும் தரவுகள் அனைத்தும் தேசிய குற்றப்பதிவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகளுடன் முரண்பாடாக இருக்கிறது; இதனடிப்படையில்தான் மத்திய அரசு பறிமுதல் செய்ததாக கூறப்படும் ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது என வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் 2018-ல் சிக்கிமில் 15,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2018-ம் ஆண்டு மொத்தம் 19,691.155 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இப்படி 2018-2020ம் ஆண்டு காலத்தில் மட்டும் 70,000 கிலோ போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி காணாமல் போன ஹெராயின் போதைப் பொருள் எங்கே போனது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த பின்னர் கிடங்கில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் மதிப்பு ரூ5 லட்சம் கோடி என சுட்டிக்காட்டப்பட்டது. இன்றைய விசாரணையின் போது நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், 4 வாரங்களில் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications