பலாத்கார வழக்கை ரத்து செய்கிறோம்.. அனாதை இல்லத்துக்கு "பர்கர்" வாங்கி கொடுங்கள்! டெல்லி ஐகோர்ட்
டெல்லி: பலாத்கார வழக்கை ரத்து செய்ய இளைஞர் ஒருவருக்கு டெல்லி ஐகோர்ட் விதித்து உள்ள நிபந்தனை பேசுபொருள் ஆகியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் நீதிபதிகள் வித்தியமான தீர்ப்பு ஒன்றை அளித்து உள்ளனர். அங்கு உள்ள பெண் ஒருவர் முன்னாள் கணவர் தன்னை தொடர்பாகப் புகார் அளித்து இருந்தார்.
மேலும், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் முன்னாள் கணவர் மீது அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

விவகாரத்து
அவர்கள் இருவரும் தனித்தனியாகவே வசித்து வந்து உள்ளனர். இதற்கிடையே அவர்கள் விவாகரத்து கோரியும் விண்ணப்பித்து இருந்ததாகத் தெரிகிறது. இதனிடையே முன்னாள் கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்து இருந்தார். அதில் தனக்கும் தனது முன்னாள் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் இதனால் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்தாக தெரிவித்து உள்ளார்.

கோரிக்கை
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி இருதரப்பினரும் தீர்வை எட்டிவிட்டதாகவும் சொந்த விருப்பத்தின் பெயரில் எந்தவிதமான அச்சுறுத்தல் இல்லாமல் இருவரும் சுமுகமாகப் பிரிந்துவிட்டதாக அவர் தனது மனுவில் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக தன் மீது புகார்களை ரத்து செய்யுமாறு அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

டென்ஷன்
அவரது முன்னாள் மனைவியும் இந்த வழக்கை ரத்து செய்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தனது மனுவில் கூறி இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று போலீஸ் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. அதேநேரம் இந்த விவகாரம் 2020இல் இருந்து நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி இதற்காக போலீஸ் மற்றும் நீதித்துறையின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு முக்கிய வழக்குகளில் இந்த நேரத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தனர்.

நிபந்தனை
இதன் காரணமாக , மனுதாரர் சமூகத்திற்கு சில சமூக நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மனுதாரர் 'பர்கர் சிங்' மற்றும் 'வாட்-அ பர்கர்' என இரு பர்கர் கடைகளை நடத்தி வரும் நிலையில், குறைந்தது 100 குழந்தைகளைக் கொண்ட இரண்டு அனாதை இல்லங்களுக்கு பர்கர்களை வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

உத்தரவு
மேலும், சுகாதாரமான முறையில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பர்கர்கள் தயாரிக்கப்பட்டு சப்ளே செய்வதை உறுதிப்படுத்த போலீசார் கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதை அவர் நிறைவேற்றினால் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்வதாகவும் இது தொடர்பான விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டு நவம்பர் 21ஆம் தேதிக்கு வழக்கை டெல்லி ஐகோர்ட் ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications