"நல்லவேளை மழைக்கு அபராதம் போடல!" ஐஏஎஸ் அகாடமி மரணங்கள்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்
டெல்லி: டெல்லியில் பேஸ்மெண்டில் இயங்கி வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் திடீரென வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் டெல்லி போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. அதன்படி டெல்லியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கே டெல்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் பேஸ்மென்டில் ஐஏஎஸ் அகாடமி நூலகம் முறைகேடாக இயங்கி வந்துள்ளது. இந்த மழையால் அங்கே திடீரென வெள்ளம் ஏற்பட்டது.
3 பேர் பரிதாபமாகப் பலி: இதில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் பெரியளவில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில் இதுவரை பலரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த இந்த விவகாரத்தை இனி சிபிஐ விசாரிக்கும் என்று டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் தன்மை கருதி இதை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை: இது தொடர்பான வழக்கை டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், "சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டும், விசாரணையில் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதை உறுதி செய்யவும் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணையை சிபிஐக்கு மாற்றுகிறது" என்றனர்.
மேலும் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க ஒரு அதிகாரியை நியமிக்குமாறு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு (சிவிசி) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் டெல்லி போலீசார் மற்றும் டெல்லி காப்ரேஷனை கடுமையாகச் சாடினர். செயல்திறன் இல்லாத விசாரணை, வெள்ளத்திற்காக எஸ்யூவி டிரைவர் மனுஜ் கதுரியாவைக் கைது செய்தது ஆகியவற்றை குறிப்பிட்டு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எஸ்யூவி ஓட்டுநருக்கு எதிரான நடவடிக்கை நியாயமற்றது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகள் அதிருப்தி: நீதிபதிகள் மேலும் கூறுகையில், "மழை நீர் விவகாரம் குறித்து டெல்லி நகராட்சி அதிகாரிகள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. எப்படி கார் ஓட்டி சென்றதற்காக டிரைவரை கைது செய்தார்கள் எனப் புரியவில்லை. நல்லவேளை பேஸ்மெண்டில் நுழைந்ததற்காக மழைநீருக்குச் சலான் போட்டு நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று அதிருப்தி தெரிவித்தனர்.
எஸ்யூவி டிரைவர்: அங்கே பேஸ்மென்டில் வெள்ளம் ஏற்பட்ட போது அந்த பகுதியில் எஸ்யூவி காரை ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். அவர் அதிவேகமாகக் காரை ஓட்டி சென்றதாகவும் இதுவே பேஸ்மெண்டில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்று குற்றஞ்சாட்டி டெல்லி போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். அதற்குத் தான் இப்போது டெல்லி ஐகோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கைதானவர்களில் அந்த டிரைவருக்கு மட்டும் சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications