இராப்பகலாக காத்திருக்கும் சடலங்கள்.. சுடுகாடுகளாகும் மைதானங்கள், பூங்காக்கள்!.. கோர பிடியில் டெல்லி!
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எரியூட்ட கூட இடமில்லாததால் பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்களில் சடலங்கள் எரியூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து வருகிறது. வடஇந்தியாவில் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி அவதியடைகிறார்கள்.
அது போல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வைக்க ஆக்ஸிஜன் இல்லாததால் அவர்கள் இறக்கும் நிலை நேரிடுகிறது.

ஆக்ஸிஜன்
இந்த நிலையில் கொரோனாவின் உக்கிரம், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் இறப்போரின் உடலை எரியூட்ட சுடுகாடுகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டோக்கன் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு சடலங்களுடன் உறவினர்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன நிறுத்த இடங்கள்
டெல்லியில் முக்கிய தகனமேடைகளாக சொல்லப்படுவது சாராய் காலே கான் எரிமேடை மற்றும் பஞ்சாபி பாக் ஆகிய இடங்கள்தான். இவை இரண்டிலுமே கொரோனாவால் இறப்போர் மட்டுமே எரியூட்டப்படுகிறார்கள். டெல்லியில் உள்ள பெரும்பாலான தகனமேடைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு வாகன நிறுத்த இடங்களில் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.

50 நடைமேடைகள்
அது போல் பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள், காலி மைதானங்கள் என சுடுகாடுகளாக மாறி வருகின்றன. காசிப்பூர் இடுகாட்டிலும் வாகன நிறுத்துமிடங்களில் கூடுதலாக 20 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாராய் காலே கான் எனும் இடுகாட்டில் 50 நடைமேடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இறப்போர்
போர் கால அடிப்படையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 650 சடலங்கள் எரியூட்டப்பட்டன. பெரும்பாலானோர் கொரோனா தீவிரத்தால் வீட்டிலேயே இறக்கும் நிலை ஏற்படுகிறது. இறப்போரின் இறுதி சடங்குகளை நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications