நிர்வாண படத்தை அனுப்பிடுவேன்! அத்துமீறிய லோன் ஆப் ஆசாமிகள்! கொத்தாய் தூக்கிய போலீஸ்! உஷார் மக்களே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தலைநகர் டெல்லியில் சீன கடன் செயலி மூலம் பணம் கொடுத்து, மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து 141 கீபேட் போன்கள், 10 ஆண்ட்ராய்டு 3 லேப்டாப்களை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் சூதாட்டங்களைப் போலவே கடன் செயலிகளும் தற்கொலைக் கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றை இயக்குவது யார் என்பதே தெரியாது.

சில ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் கடன் செயலிகள், அந்தப் பணத்திற்கு பல்லாயிரக்கணக்கில் கொடூரமாக வட்டி வசூலிக்கின்றன.

கடன் செயலிகள்

கடன் செயலிகள்

குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், கடன் பெற்றவரையும், அவரது குடும்பத்து பெண்களின் படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்-அப் மூலம் செயலிகள் பரப்புகின்றன. இதனால் அவமானம் அடையும் கடன்தாரர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிறது. கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கியும் எச்சரித்துள்ளதோடு, ஓவ்வொரு மாநில காவல்துறையும் எச்சரிக்கிறது.

ஆன்லைன் கடன்

ஆன்லைன் கடன்

ஆன்லைன் கடன் செயலிகள் புற்றீசல் போல பெருகி விட்டன. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைப் போலவே, கடன் செயலி தற்கொலைகளும் பெருக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது. எனவே, ஆன்லைன் கடன் செயலிகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சீன கடன் செயலி

சீன கடன் செயலி

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் சீன கடன் செயலி மூலம் பணம் கொடுத்து, மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பணம் வாங்கி 150க்கும் மேற்பட்டோர் சிக்கி அவதியுற்று வந்ததாகவும், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து அதிரடி நடவடிக்கை மூலம் டெல்லி போலீசார் அவர்களை நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 141 கீபேட் போன்கள், 10 ஆண்ட்ராய்டு 3 லேப்டாப்கள், 153 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் 4 டி.வி.ஆர்.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மிரட்டல்

மிரட்டல்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் எவ்வித ஆவணங்களுமின்றி பணம் கொடுத்ததோடு, பணம் செலுத்தாதவர்களின் மொபைலில் இருந்த தொலைபேசி எண்களுக்கு, மார்பிங், போலி நிர்வாண படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர், தவிர தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசியதாகவும், சிலர் தங்கள் மரியாதையைக் காப்பாற்ற பணம் செலுத்திய நிலையில், மேலும் அதிக பணம் கேட்டு தொல்லை செய்துள்ளனர்.

கிரிப்டோ கரன்சி

கிரிப்டோ கரன்சி

இவர்களுக்கு கடன் கொடுக்க பணம் சீனாவிலிருந்து கிரிப்டோகரண்டி வடிவில் இந்தியாவில் உள்ள பல இடைத்தரகர்களுக்கு வருகிறது. இதையடுத்து பல்வேறு சீன செயலிகள் மூலம், மக்களுக்கு ஆப்கள் மூலம் ரூபாயாக மாற்றி கடனாக வழங்கியுளார்கள் எனவும், இவர்கள் மட்டுமல்லாது, இந்த நெட் ஒர்க்கில் பல ஏஜெண்டுகளாக செயல்படுவதாக போலீசார் கூறியுள்ளனர். ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் ரிசர்வ வங்கியிம் அனுமதி பெற்றுதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், என்றும் இல்லையென்றால் அந்த செயலி ஆபத்தானது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+