நாங்களும் தயார்...நீண்ட வாளுடன்...டெல்லி எல்லையில் குவிக்கப்பட்ட போலீஸ்
டெல்லி : விவசாயிகளின் வாள் தாக்குதலை சமாளிக்க, நீணட வாள், கேடயங்களுடன் டெல்லி போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். டெல்லி எல்லையில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 26 அன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் விவசாயிகள் சிலர் வாளுடன் வந்து போலீசாரை தாக்கினர். இதில் சுமார் 400 போலீசார் காயமடைந்தனர். இது போன்ற தாக்குதல்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக புதிய வகையான வாள் ஒன்றை டெல்லி போலீசார் வடிவமைத்துள்ளனர்.

வாள் தாக்குதல் தடுப்பு பிரிவினருக்கு சட்ட அமலாக்க பிரிவு சார்பில் இந்த வாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாளின் சிறப்பம்சம் என்னவென்றால், சாதாரண வாளை விட இரண்டு மடங்கு நீளம் கொண்டது. இதனால் தங்களை தாக்க வருபவர்களை தொலைவில் இருந்து கூட சமாளிக்க முடியும்.
டெல்லி எல்லை பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அதிக அளவிலான விவசாயிகளும் டெல்லி எல்லைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஒரு கலவரம் நடந்தால் அதில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications