கிரெட்டா துன்பெர்க் மீது வழக்கா...டெல்லி போலீஸ் மறுப்பு
டெல்லி : விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட சுவீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்ன் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை என டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு மற்றும் உள்நாட்டு பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே போன்று சுவீடன் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க்னும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அத்துடன் தன் மீது வழக்கு தொடர்ந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் பேசி இருந்தார்.

இதனால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் மீது டெல்லி போலீசார், சதி மற்றும் குழுவினருக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் பரவியது. இதனால் டெல்லி போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், வழக்கில் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட யாருடைய பெயரும் சேர்க்கப்படவில்லை. கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய இணையதள முகவரியை உருவாக்கியவர்கள் தொடர்பாகத் தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications