நச்சு யமுனை நதிநீரை பாட்டிலில் அனுப்புகிறேன் குடித்து பாருங்க..தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் பதில்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் யமுனை நதியில் ஹரியானா
பாஜக அரசு நச்சு கலந்ததாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள்
முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பி
வருகிறது. இந்த நிலையில், நச்சு கலந்த யமுனை நதிநீரை பாட்டில்களில்
அனுப்புகிறேன்.. அதனை குடித்து பார்க்க வேண்டும் என இந்திய தேர்தல்
ஆணையத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று
வருகிறது. டெல்லி வீதிகளில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி முன்வைக்கும்
குற்றச்சாட்டுகள்- பதிலடிகளால் அதிர்ந்து கொண்டிருக்கிறது டெல்லி தேர்தல் களம்.

இதில் டெல்லிக்கு வரும் யமுனை நதிநீரில் ஹரியானா பாஜக அரசு நச்சு
கலந்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய பேச்சு பெரும் பிரளயத்தைக்
கிளப்பிவிட்டது. யமுனை நதியில் பாஜக அரசு நச்சு கலந்தது என்பதற்கான
ஆதாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தர வேண்டும் என பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே யமுனை நதிநீரை குடித்து பார்த்தேன்.. அதில் நச்சு இல்லை என
ஹரியானா மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய
தேர்தல் ஆணையமும் தலையிட்டது. இரு மாநிலங்களுக்கு இடையே பகைமையை
ஏற்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முற்பகல்
11 மணிக்குள் விளக்கம் தர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் அதிஷி தலைமையிலான குழு ஏற்கனவே தேர்தல்
ஆணையத்துக்ககு நேரில் சென்று விளக்கம் தந்திருந்தது. இந்த நிலையில் இன்று
தேர்தல் ஆணையத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பதில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், யமுனை நதியில் ஹரியானா பாஜக
அரசு நச்சை கலந்துவிட்டிருக்கிறது; இதனை நிரூபிக்கும் வகையில் யமுனை
நதிநீரை பாட்டில்களில் அனுப்பி வைக்கிறேன்; தேர்தல் ஆணையர்கள் குடித்து
பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications