ராகுல் ஆதரவு போராட்டத்தில் ஷாக்! போலீஸ் முகத்தில் எச்சில் துப்பிய காங். மகளிர் அணி தலைவி டி சோசா!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5-வது நாளாக விசாரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது டெல்லி போலீசார் முகத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி நெட்டா டி சோசா எச்சில் துப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் சோனியா, ராகுல் இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சோனியா, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடந்த வாரம் 3 நாட்கள் அமலாக்கப் பிரிவு முன்பாக ராகுல் காந்தி ஆஜரானார். அவரிடம் 30 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 4-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ராகுல் ஆஜரானார். ராகுலிடம் இந்த விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Delhi Protest: Senior Cong. leader Netta DSouza spits at Police

இதனைத் தொடர்ந்து இன்று 5-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு எதிராக இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை வேனில் ஏற்றிய போது, காங்கிரஸ் மகளிர் அணி தலைவி நெட்டா டிசோசா, போலீஸ் முகத்தில் எச்சிலை காறி துப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை கொத்தாக பிடித்து தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் டி சோசா, போலீஸ் முகத்தில் காறி துப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+