Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அமோனியம் நைட்ரேட்+ டெட்டனேட்டர்கள்+ ஆயில்!" டெல்லி வெடித்து சிதறிய காரில்.. உள்ளே இருந்தது என்ன!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்றைய தினம் டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வரும் சூழலில், கார் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்துகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் செங்கோட்டை அருகே திடீரென கார் வெடித்துச் சிதறியது. திடீரென கார் வெடித்துச் சிதறியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதற்கிடையே இந்த டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

Delhi Red Fort Car Blast Ammonium Nitrate Fuel Oil and Detonators Used in Deadly Explosion

டெல்லி கார் வெடிப்பு

முதலில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத (low intensity bomb) வெடிப்பாக இருக்கலாம் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், வெடிப்பு ஒரு கிமீ வரை கேட்கப்பட்டது. அருகே இருந்த பல வாகனங்கள் முழுமையாகத் தீயால் பாதிக்கப்பட்டது. இது வெடிப்பின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்தது.

அதாவது கார் வெடிப்பில் அமோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணெய் மற்றும் வெடிக்கும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இதை உறுதி செய்யத் தடயவியல் ஆய்வகத்தின் இறுதி ரிப்போர்ட்டிற்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு

டெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த இந்த வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் உபா சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வெடிபொருள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் பின்னணியால் யார்.. மூளையாகச் செயல்பட்டது யார் என்பது குறித்த விவரங்களைக் கண்டறிய ஒரு பக்கம் பயங்கரவாத விசாரணை தீவிரமாக நடந்து வரும் சூழலில்.. மற்றொரு பக்கம் டெல்லி முழுக்க பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

கார் வெடிப்பைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோட்வாலி காவல் நிலையத்தில் உபா சட்டத்தின் 16 மற்றும் 18 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பயங்கரவாத செயல்கள் தொடர்பானவையாகும். மேலும், வெடிபொருள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அமித் ஷா

கார் வெடிப்பு குறித்த தகவல் கிடைத்தவுடனேயே உள் துறை அமைச்சர் அமித் ஷா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரையாடினார்.. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் திங்கள்கிழமை மாலை 7 மணியளவில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்தனர், சில வாகனங்களும் சேதமடைந்தன.

தீவிர விசாரணை

இந்த வெடிப்பு குறித்து தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த வெடிப்பில் சிலர் உயிரிழந்தனர். டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளருடனும் நான் பேசியிருக்கிறேன். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைச் சீக்கிரமே கண்டுபிடிப்போம்" என்றார்.

செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள சிக்னலில் நேற்று திங்கள்கிழமை மாலை இந்த கார் வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில் ஹூண்டாய் ஐ20 கார் முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும், இந்த குண்டுவெடிப்பில் பல வாகனங்கள் தீக்கிரையானது. இதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+