கொரோனா பாதிப்பிலிருந்து எளிதாக மீள ஒரு வழியிருக்கு.. குணமடைந்த ரோஹித் சொல்லும் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: COVID-19 பாதிப்பிலிருந்து சிகிச்சைக்கு பிறகு, மீண்ட, டெல்லியை சேர்ந்த 45 வயதாகும், ரோஹித் தத்தா, பாதிப்பிலிருந்து மீளுவதற்கான டிப்ஸ் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

ரோஹித் தத்தா பிப்ரவரி 24 அன்று ஐரோப்பாவிலிருந்து டெல்லி திரும்பியிருந்தார். பின்னர், அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுவதை பாருங்கள்: நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும், உடனடியாக, நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.

கவனிப்பு

கவனிப்பு

மருத்துவமனை அதிகாரிகள் என்னை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவில்லை. நோயாளிகளுக்கு தேவையான அனைத்தையும் மருத்துவமனையில் ஏற்பாடு செய்தனர். வட இந்தியாவில் நான்தான் முதல் கொரோனா நோயாளி. ஒவ்வொரு மருத்துவரும், ஊழியர்களும் நன்கு கவனித்து சிகிச்சையளித்தனர்.

மூச்சு பயிற்சி

மூச்சு பயிற்சி

கோவிட் -19 நோயாளிகளுக்கு பிராணயாமா செய்வதை நான் பரிந்துரைக்கிறேன். விரைவில் கொரோனா பாதிப்பு குறைவாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனப் பதற்றத்தையும், பிராணயாமம் குறைக்கும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், பிராணாயாமம், செய்ததன் மூலம் அந்த பதற்றம் குறைந்தது. நோய் பாதிப்பிலிருந்து விரைவாக மீள அது உதவியது.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

எல்லா மக்களும், அரசையும், மருத்துவர்களையும் நம்புங்கள். நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், பயப்படத் தேவையில்லை. நேர்மறை எண்ணத்தோடு இருங்கள், அரசையும் மருத்துவர்களையும் நம்புங்கள். எந்தவொரு நோயாக இருந்தாலும், மனதளவில் நாம் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குணநலன்

குணநலன்

கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு, உங்கள் குணாதிசியத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, நான் குணமடைந்த பிறகு, இறைவன் மீது பக்தி அதிகமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார் ரோஹித். பிராணயாமம் என்பது மூச்சுக் காற்றை மெதுவாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியே விடும் யுக்தியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+