Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OMICRON DEATH: ஒமிக்ரானுக்கு முதல் பலி.. தலைநகரை நடுங்க வைக்கும் தொற்று பாதிப்பு.. 1,300-ஐ தாண்டியது

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஏழு மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலையை தந்து வருகிறது.. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே போகிறது.. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிரட்டல் விடுக்க ஆரம்பித்துள்ளது..

இதுவரை 961 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் இதை பற்றி சொன்னதாவது:

நிபுணர்கள்

நிபுணர்கள்

"தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.. கடந்த வாரம் வரை ஒருநாளைக்கு கொரோனா கேஸ்கள் 8 ஆயிரம் பேர் வரை பதிவான நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. 961 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதில் 320 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

 தீவிர நடவடிக்கை

தீவிர நடவடிக்கை

இதனிடையே, மகாராஷ்டிராவில், கொரோனாவின் 3வது அலை தொடங்கி விட்டதாக அம்மாநிலத்தை மாநிலத்தை சேர்ந்த சிறப்பு குழுவின் உறுப்பினர் டாக்டர் ராகுல் பண்டிட் மற்றொரு தகவலை தெரிவித்துள்ளார்... டெல்லி மற்றும் மும்பையில் கொரோனா பெரிய அளவில் பரவி வருகிறது என்றும், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்...

 பாதிப்புகள்

பாதிப்புகள்

அதுமட்டுமல்ல, டெல்டா, ஒமிக்ரான் ஆகிய 2 வைரஸ்களும் இணைந்து தாக்கி வருவதே 3வது அலைக்கு காரணமாக அமையும் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். இப்படி நிபுணர்கள் பல்வேறு தகவல்களை தினமும் தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் இதே டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,313 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லி

டெல்லி

கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு டெல்லியில் அதிகம் என்றாலும், தற்போதைய நிலவரப்படி மேலும் எண்ணிக்கை பெருகி உள்ளது.. இது தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 423 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இதனால், டெல்லியில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14,18,227 ஆக அதிகரித்துள்ளது...

 கலக்கம்

கலக்கம்

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3081 பேர் இப்போதைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்... ஆனால், தொற்று பாதிப்பால் டெல்லியில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை... இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25,106 என்ற அளவில் உள்ளது... இதையடுத்து தலைநகரில் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் தீவிரமாக கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

 முதல் பலி

முதல் பலி

இதனிடையே, இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.. மராட்டிய மாநிலத்தில் தான் இந்த முதல் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.. மகாராஷ்டிரா மாநிலம் சிஞ்ச்வார்ட் பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒமைக்ரான் வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது... இவர் நைஜீரியாவில் இருந்து வந்துள்ளார்.. அப்போதுதான் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால், கடந்த 28-ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்,..

Recommended Video

    புதுச்சேரியில் முதல் முறை.. இருவருக்கு ஓமைக்ரான்: சர்ச்சையாக மாறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!
     மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா

    நம் நாட்டில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது... இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 198 பேருக்கு இந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது... இதையடுத்து அங்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது... ஒமிக்ரான் வகை கொரோனாவோடு டெல்டா வகை கொரோனா பாதிப்பும் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2 நாட்களுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா கேஸ்கள் இப்போது 15 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+