ஷாஹீன் பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்.. பாஜகவில் சேர்க்கப்பட்ட சில மணி நேரத்தில் நீக்கம்
டெல்லி: டெல்லி 'ஷாஹீன் பாக்' சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாஜகவில் சேர்க்கப்பட்ட சில மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி 2020 தொடக்கம் வரை பெரும் போராட்டம் நடந்தது. குறிப்பாக டெல்லி ஷாகீன் பாக்கில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போராட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் டெல்லி 'ஷாஹீன் பாக்' சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் புகுந்த கபில் குஜ்ஜார் என்பவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டு அதிரவைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமினில் வெளியில் உள்ள கபில் குஜ்ஜார் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதற்கு சமூக வலைதளங்களில் எழுந்த கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து 'ஷாஹீன பாக்' சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி கைதான கபில் குஜ்ஜார் பாஜகவில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் எழுந்த கடும் விமர்சனங்களை அடுத்து பாஜக அவரை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காசியாபாத் பாஜக தலைவர் சஞ்சீவ் சர்மா, "பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து கட்சியில் சேர்க்கப்பட்ட சில நபர்களில் கபில் குஜ்ஜாரும் ஒருவர். சர்ச்சைக்குரிய ஷாஹீன் பாக் சம்பவத்தில் அவர் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தெரிந்தவுடன், அவர் இணைந்தது உடனடியாக நடைமுறைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications