டெல்லியில் பட்டப் பகலில் துப்பாக்கிச்சூடு.. இருவர் பலியான பயங்கரம்
டெல்லி: டெல்லியில், பட்டப்பகலில் நட்டநடு சாலையில், இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கு டெல்லியில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குர்வேஷ் (40) மற்றும் கன்ச்சி (28) ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் டெல்லியில் மட்டும் குர்வேஷ் மீது 41 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கன்ச்சி மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
நந்த்நகரி என்ற பகுதியில், இன்று பிற்பகல் 12.12 மணிக்கு, சிக்னல் ஒன்றின் அருகே பைக்்கில் வந்த மர்ம நபர்கள், சரமாரியாக குர்வேஷ் மற்றும் கன்ச்சி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக, இருவரையும், குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், குர்வேஷ் மற்றும் கன்ச்சி இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம், 7 முதல் 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications